×
 

ஐஸ்வர்யா ராய் மகள் குறித்த அவதூறு.. கூகுள் மற்றும் யூட்யூப் சேனல்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா தொடர்ந்த வழக்கு: 'கூகுள்',  'யூடியூப்' சேனல்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் 

உடல் நலம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவது குறித்து, நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா மற்றும் அவருடைய தந்தை அபிஷேக் பச்சன் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 

இந்த வழக்கில் அது போன்ற அவதூறு செய்திகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு இருந்த போதும், அதை பொருட்படுத்தாமல் சில தளங்கள் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருவதாக மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தை ஆராத்யா தரப்பில் அணுகினார்கள். 

அதைத்தொடர்ந்து, கூகுள் மற்றும் சில யூடியூப் சேனல்களுக்கு விளக்கம் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை மார்ச் 17ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: ‘முஸ்லிம் சமூகத்துக்கே எதிரானது’: வக்ஃபு வாரிய திருத்த மசோதா மீது ஒவைசி காட்டமான பேச்சு

பிரபல நட்சத்திர தம்பதிகளான அபிஷேக் பச்சன், உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் மகள் ஆராத்யா. இவர், பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் பேத்தி ஆவார். நாட்டின் பெருமைமிகு நட்சத்திர குடும்பத்தின் வாரிசு என்பதால் ஆராத்யா பிறந்தது முதலே ஊடக வெளிச்சத்தில் இருந்து வந்தார். 

இந்த நிலையில் சிறுமி ஆராத்யாவின் உடல் நிலை குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை சில ஊடகங்கள் வெளியிட்டு வந்தன. அதைத்தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி அன்று ஆராத்யாவின் உடல் நலம் குறித்து தவறான கருத்துக்களை வெளியிட இடைக்கால தடை விதித்து பல யூட்யூப் சேனல்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஒரு சிறுமி பற்றி பல தவறான தகவல்களை பரப்புவது 'நோய் வக்கிர'த்தை பிரதிபலிப்பதாக அப்போது நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அவருடைய "மோசமான உடல்நிலை' அல்லது "அவரே இல்லை" என்பது போன்ற பொய்யான தகவல்களை கூறும் வீடியோக்களை அகற்றும்படியும் கூகுள் நிறுவனத்திற்கு உத்தரவிடப் பட்டிருந்தது.

பாலிவுட் டைம், பொல்லி பகோரா, பொல்லி சமோசா மற்றும் பாலிவுட் ஷைன் உள்ளிட்ட யூடியூப் சேனல்களுக்கும் நீதிமன்றம் இது தொடர்பாக சம்மன் அனுப்பி இருந்தது. சில யூடியூப் வீடியோக்களில் ஆராத்யாவின் உடல்நலம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய முற்றிலும் தவறான தகவல்கள் இடம்பெற்று இருப்பதாகவும், பச்சன் குடும்பத்தின் நற் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாகவும் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டிருந்தது அல்லவா?. 

டெல்லி நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான உத்தரவை பிறப்பித்து இருந்தபோதிலும் சில வலைத்தளங்கள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க மறுத்துவிட்டன. அதைத் தொடர்ந்து புதிய மனு ஒன்றுஆராத்யா தரப்பில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

"இணையத்தில் பரவி வரும் ஜோடிக்கப்பட்ட மற்றும் தவறான உள்ளடக்கம் காரணமாக இந்த நட்சத்திர குழந்தை தொடர்ச்சியான ஊடக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. தனது சட்ட நடவடிக்கை மூலம் தனியுரிமையை பாதுகாக்கவும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் தவறான தகவல்களை பரப்புவதை தடுக்கவும் கோரி" இந்த புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

டெல்லி உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை பின்பற்ற தவறிய வலைத்தளங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆரத்யாவின் சட்ட குழுவினர் உயர் நீதிமன்றத்தில் அழுத்தம் கொடுத்து உள்ளனர். அதைத்தொடர்ந்து கூகுள் உள்ளிட்ட சில வவலைத்தளங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ள டெல்லி உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை மார்ச் 17ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

நாட்டின் பிரபலமான திரைப்பட குடும்பத்தைச் சேர்ந்த ஆராத்யா பிறந்ததிலிருந்து மக்கள் பார்வையில் இருந்து வருகிறார். பிரான்ஸ் கேன்ஸ் திரைப்பட விழா போன்ற நிகழ்வுகளில் தனது தாயுடன் ஆராத்யா பங்கேற்று இருக்கிறார்.

மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார் ஆரத்தியா. அவரை தாயார் ஐஸ்வர்யா ராய் எப்போதும் அருகில் இருந்து பாதுகாப்புடன் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் கட்சிக்கு NO.. புதிய அமைப்பு தொடங்கிய ஜூனியர் ஓபிஎஸ்.. பரபரக்கும் அரசியல் களம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share