×
 

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரம்... தி.க.துணைத்தலைவர் மீதான வழக்கு ரத்து செல்லும்..

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக திராவிடர் கழக துணைத்தலைவர் பூங்குன்றன் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக திராவிடர் கழக துணைத்தலைவர் பூங்குன்றன் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தி திணிப்புக்கு எதிராக கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் எழும்பூர் ரயில் நிலையம் எதிரே  போராட்டம் நடைபெற்றது. 

இது தொடர்பாக கி.வீரமணி உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட தி.க.வினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, துணைத்தலைவர்  பூங்குன்றன் உள்ளிட்ட மூன்று பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாஜக செயல்படுகிறது! அதிருப்தியில் கட்சியிலிருந்து விலகிய பாஜக நிர்வாகி

இந்நிலையில், தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி பூங்குன்றன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கவில்லை எனவும் பொதுமக்களுக்கு எந்த இடையூறுமின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி , பூங்குன்றன் உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: திமுக ஒரு திட்டத்தை எதிர்த்தால் அது சூப்பர்ன்னு அர்த்தம்.. மக்களுக்கு பாடம் எடுத்த ஹெச்.ராஜா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share