×
 

தார்ப்பாய்களால் மூடப்படும் மசூதிகள்.. சச்சரவுகளை தடுக்க உ.பி.அரசு நடவடிக்கை..!

உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு மசூதிகளை திரையிட்டு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு மறைந்து அனைவரும் ஒன்று என்ற மகத்துவம் ஓங்கி நிற்பது ஹோலி பண்டிகை விழாவின் சிறப்பு.

இந்த நிலையில், 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக நடைபெறும் நிகழ்வாக ஹிந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டிகையும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ரமலானின் ஜும்மா நோன்பும் வருகிற மார்ச் 14 (நாளை) ஒரே நாளில் நிகழ்கிறது.

இதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள ஜாமா மசூதி உட்பட 10 மசூதிகளை திரையிட்டு மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இஸ்லாமியர்- கிறிஸ்தவர் பட்டியல் சமூக வாக்குகள் சிதறடிப்பு- பதறும் திருமா..!

அதன்படி, ஷாகி ஜமா மசூதி, லடானியா வாலி மசூதி, தானே வாலி மசூதி, ஏக ராத் மசூதி, குருத்வாரா சாலை மசூதி, கோல் மசூதி, கஜூர் வாலி மசூதி, அனார் வாலி மசூதி மற்றும் கோல் துக்கான் வாலி மசூதி ஆகிய பத்து மசூதிகள் திரையிட்டு மூடப்படவுள்ளன.

இதுகுறித்து பேசிய சம்பல் எஸ்பி ஷ்ரீஷ் சந்திரா, “ இரு சமூகங்களும் தங்களின் பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காகவும், சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும்

இரு சமூகங்களுக்கிடையே எந்தக் குழப்பமோ பதற்றமோ ஏற்படாமல் இருக்க 'சௌபாய்' எனப்படும் ஊர்வலம் நடைபெறும் பாதையில் அடையாளம் காணப்பட்டுள்ள பத்து மசூதிகள் திரையிட்டு மூடிவைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வழக்கமான ஒன்றுதான் என்று அவர் கூறினார்.

மேலும், நாளை தொழுகையின் நேரம் சௌபாய் ஊர்வலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படும் என்றும், இரு சமூகத்தினரிடையே சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவித குற்றச் சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க மிகக் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

இதையும் படிங்க: மார்ச் 2ஆம் தேதி ரமலான் நோன்பு தொடக்கம்..! தலைமை ஹாஜி அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share