×
 

சில்வண்டு சிக்காதேய்... அரசியவாதிகளின் ஹனிட்ராப் வீடியோ: சிட்டாய் பறக்கும் சித்தராமய்யா..!

இந்த விவகாரம் கர்நாடகாவில் அரசியல் நெறிமுறைகள், பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.

கர்நாடாக மாநிலத்தையே உலுக்கிய சமீபத்திய ஹனிட்ராப் வீடியோ சர்ச்சை தொடர்பாக "யாரையும் பாதுகாப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெளிவுபடுத்தி உள்ளார்.

கூட்டுறவு அமைச்சர் கே.என்.ராஜண்ணா தன்னை ஹனிட்ராப் பொறியில் சிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கடந்த ஆண்டுகளில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 48 சட்டமன்ற உறுப்பினர்கள் குறிவைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியபோது இந்த பிரச்சினை அங்கு பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பேசிய முதல்வர் சித்தராமய்யா, ''சட்டத்தை நிலைநாட்டவும் நீதியை உறுதி செய்யவும் அரசு உறுதி பூண்டுள்ளது.குற்றவாளிகள் என கண்டறியப்பட்ட எவரும் தண்டிக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க எந்த முயற்சியும் எடுக்கப்படாது'' என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: அதிர்ச்சி… ஹனிட்ராப்பில் சிக்கிய 48 அரசியல்வாதிகளின் வீடியோ சிடி... கர்நாடகாவில் பரபரப்பு..!

இந்த சர்ச்சை கர்நாடக சட்டமன்றத்தில் சூடான விவாதங்களைக் கிளப்பி உள்ளது. எதிர்க்கட்சியான பாஜக நீதி விசாரணை கோரியதுடன் சட்டமன்ற உறுப்பினர்களும் ஹனிட்ராப் வீடியோக்கள் மூலம் மிரட்டப்படுவதாகக் கூறியது.

அமைச்சர் ராஜண்ணா முறையான புகார் அளித்தவுடன் உயர் மட்ட விசாரணை தொடங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா கூறியுள்ளார். இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தீவிரப்படுத்தி உள்ளன. வற்புறுத்தல், மிரட்டலுக்கான அடையாளச் சான்றாக சட்டமன்றத்தில் சிடிகளை ஒப்படைத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

இந்த விவகாரம் கர்நாடகாவில் அரசியல் நெறிமுறைகள், பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. விசாரணை வெளி வரும்போது, இந்த விஷயத்தைக் கையாள்வதில் வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்பதை உறுதி செய்வதில் அனைவரின் பார்வையும் மாநில அரசின் மீது உள்ளது. நீதி நிலைநாட்டப்படும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எவரும் தப்பவிடப்பட மாட்டார்கள் என்றும் சித்தராமையா மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: ஆத்திரப்படுத்திய திமுக அரசு... அலட்சியப்படுத்திய சித்தராமையா..! இதுதான் காரணமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share