×
 

இது எப்படி இருக்கு..!? "அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நாள்தான் உண்மையான சுதந்திர தினம்" ; மோகன் பகவத் சொல்கிறார் ...

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட நாள் தான் நாட்டின் உண்மையான சுதந்திர தினம் என்று ஆர் எஸ் எஸ் இயக்க தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.

ராமர் கோவில் கும்பாபிஷேக நாள் தான் இந்தியாவின் உண்மையான சுதந்திரத்தின் சின்னம் என்றும் அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். 

அயோத்தி ராமர் கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த 11ஆம் தேதி உடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத்  கூறியதாவது:-

"பல நூற்றாண்டுகளாக எதிரியின் தாக்குதலை (பரச்சக்கரம்) எதிர்கொண்ட பாரதத்தின் உண்மையான சுதந்திரம் என்பதன் அடிப்படையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட தேதிதான் தான் நாட்டின் உண்மையான சுதந்திரத்தை (பிரதிஷ்டா துவாதசி) குறிக்கிறது. இந்த நாளைத் தான் நாட்டின் சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும். 

இதையும் படிங்க: ‘கோயில்களில் இது என்ன கலவரம்...’ஆர்எஸ்எஸின் ஊதுகுழலையே தூக்கி எறிந்த மோகன் பகவத்..!

யாரையும் எதிர்ப்பதற்காக ராமர் கோவில் இயக்கம் ஆரம்பிக்கப்படவில்லை. இந்த இயக்கம் பாரதத்தின் "சுய விழிப்புணர்வை" ஏற்படுத்தவே அமைக்கப்பட்டது" என்று அவர் மேலும் கூறினார். 

 இந்தூரில் ஸ்ரீராமஜென்ப பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய்க்கு தேசிய தேவி அஹில்யா விருதை வழங்கிய பின்னர் மேற்கண்டவாறு பேசிய பகவத்,
"கடந்த ஆண்டு அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது நாட்டில் எந்தவித முரண்பாடும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார். 

ஒவ்வொரு ஆண்டும் இந்து உரை தலைமை இடமாகக் கொண்ட இந்தசமூக அமைப்பு பல்வேறு துறைகளில் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் முக்கிய பிரமுகர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இருந்து வருகிறார். 

நானாஜி தேஷ்முக், விஜயராஜே சிந்தியா, ரகுநாத் ஆனந்த் மஷேல்கர் மற்றும் சுதா மூர்த்தி போன்ற பிரபலங்களுக்கு தேசிய தேவி அஹில்யா விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: ‘இந்து- முஸ்லீம் மோதல் வேண்டாம்...’அம்பேத்கர் பிரச்சனைக்கு அணை போடுகிறாரா மோகன் பகவத்..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share