×
 

கூலிப்படையை ஏவி மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்.. கள்ளக்காதலை கண்டித்ததால் வெறிச்செயல்..

பஞ்சாப்பில் கள்ளக்காதலை கண்டித்த மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் தொழிலதிபர் அனோக் மிட்டல். வயது 34. 4 மாதங்களுக்கு முன்பு தான் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். இவரது மனைவி லிப்சி மிட்டல். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அனோக் மிட்டலுக்கு 24 வயதான மற்றொரு பெண்ணுடன் திருமணம் தாண்டிய உறவு இருந்துள்ளது. இதனை மனைவி லிப்சி கண்டித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கு இடையிலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு, டெஹ்லான் புறவழிச்சாலையில் உள்ள ரிசார்ட்டில் நடந்த இரவு விருந்திற்கு மனைவியை அனோக் மிட்டல் அழைத்து சென்றுள்ளார். நள்ளிரவு வீடு திரும்புகையில் சிறுநீர் கழிக்க காரை சாலையோரத்தில் நிறுத்தியுள்ளார் அனோக் மிட்டல். அப்போது 5 பேர் கொண்ட கும்பல், கூர்மையான ஆயுதங்களுடன் வந்து அனோக்கை தாக்கியுள்ளது. மனைவி லிப்சியை தாக்கியதோடு மட்டுமல்லாம், அவருடைய நகைகளையும், காரையும் கொள்ளையடித்து தப்பியது. நினைவு திரும்பியது இதுகுறித்து அனோக்மிட்டல் போலீசில் தகவல் அளித்துள்ளார். ஆனால் அனோக் மிட்டல் முன்னுக்கு பின் முரணாக பேசியது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: அம்மாவை.. அப்பா இப்படி தான் கொன்னாரு! பிஞ்சு குழந்தை வரைந்த ஓவியத்தால் சிக்கிய தந்தை.. தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்..

போலீசார் தங்களது பாணியில் விசாரிக்க துவங்கினர். அப்போது அனோக் மிட்டல் தனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து இந்த சதித்திட்டத்தை அரங்கேற்றியது தெரிந்தது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்ய அனோக்மிட்டல் கூலிப்படையை ஏவியுள்ளார். அவர்களுடன் 2.50 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டது மட்டமல்லாமல் 50 ஆயிரம் ரூபாய் முன்பணமும் வழங்கியது விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து அனோக் மிட்டல், அவரது காதலி, கூலிப்படையை சேர்ந்த மிர்த்பால் சிங், குர்தீப் சிங், சோனு சிங் மற்றும் சாகர்தீப் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தலைமறைவாக உள்ள கூலிப்படையின் முக்கிய தலைவனான குர்பிரீத் சிங்கை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி..! தகாத உறவால் ஆத்திரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share