×
 

திருமாவை விடுங்க.. என் எதிரியை நான் கருவில் இருக்கும்போதே தீர்மானித்து விட்டேன்- சீமான் திட்டவட்டம்..!

வெளிப்படையாகவே அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தை தவிர்த்து முற்றாக ஒரு புதிய சமுதாயத்தை படைப்பதற்கு பெயர்தான் புரட்சி என்கிறான்.  அதைச் செய்ய வந்த பிள்ளைகள் நாங்கள்.

"நான் கருவில் இருக்கும்போதே என் எதிரியை தீர்மானித்து விட்டேன்.." விசிக தலைவர் திருமாவளவன் குறித்து கேள்வி எழுப்பியதற்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்தார். 

செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சீமான், ''கூட்டணி இல்லாமல் எப்படி ஜெயிக்க முடியும் என கேட்கும் நீங்கள் கொள்கை இல்லாமல் எப்படி ஜெயிக்க முடியும் என்று எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா ? கொள்கை முக்கியமா? கூட்டணி முக்கியமா? கூடி கொலை செய்தால், கூடி கொள்ளை அடித்தால் சரி என்று ஏற்றுக் கொள்கிறீர்களா? நெருப்பை எப்படி நெருப்பால் அணைக்க முடியும்? நெருப்பை தண்ணீர் வைத்துதானே அணைக்க முடியும். தீமையை வைத்து எப்படி தீமையை ஒழிப்பீர்கள்?

நீங்கள் உலகத்தில் உள்ள எல்லா சித்தாந்தங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். இறைமகன் இயேசு, இறை தூதர் நபிகள் நாயகத்திடம் செல்லுங்கள் அல்லது பகவான் கிருஷ்ண பிரமாத்வாவிடம் செல்லுங்கள். இல்லை சித்தர்கள், ஞானிகள், யோகிகளிடம் செல்லுங்கள். தீமையை நன்மையை வைத்து தான் ஒலிக்க முடியும். திமுக, அதிமுக சரி. நான் அதிமுகவிடம் போய் விடுகிறேன். ஊழலை, லஞ்சத்தை எப்படி ஒழிப்பீர்கள்?

இதையும் படிங்க: திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சி தான்..! பாவம் விஜய்... சீமான் சொல்லியது என்ன?

மதுவை ஒழிக்க வேண்டும். இங்கே மது இருக்கிறதா? இல்லையா? அவன் 65 ரூபாய் கமிஷன் வாங்கினால் இவன் கூட 25 ரூபாய் கமிஷன் வாங்குவானே ஒழிய, ஏதாவது இருக்கா என்று சொல்லுங்கள். இல்லை எதில் மாறுதல் சொல்லுங்கள். அதிமுக கொடியில் அண்ணா இருக்கிறார். திமுக கொடியில் இல்லை. அவ்வளவுதான். பார்ட்டி சேஞ்ச் இருக்கிறது. பாலிசி செஞ்ச் இருக்கிறதா?  தெளிவாகிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் என்னிடம் கேள்வி கேட்கக் கூடாது. ஆள் மாற்றம் ஆட்சி மாற்றத்திற்கு வரவில்லை.

நாங்கள் அடிப்படை அமைப்பாக அரசியல் மாற்றத்திற்கு வந்த புரட்சியே வாதிகள் கட்டிய கட்டடத்திற்கு வெள்ளை அடிக்க வந்த சீர்திருத்தவாதிகள் அல்ல. இந்த கட்டிடத்தை தகர்த்துவிட்டு புத்தம் புதியதாக ஒரு மாற்று கட்டடத்தை கட்ட வந்தவர்கள். அதைத்தான் இளைய புரட்சியாளன் பகத்சிங் கற்பித்திருக்கிறான். வெளிப்படையாகவே அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தை தவிர்த்து முற்றாக ஒரு புதிய சமுதாயத்தை படைப்பதற்கு பெயர்தான் புரட்சி என்கிறான்.  அதைச் செய்ய வந்த பிள்ளைகள் நாங்கள்.

 

நீங்கள் இந்த மது, மதம், சாதி, போதை, ஏழை, பசி, வறுமை, பட்டினி , ஊழல், லஞ்சம், கொலையை, கொள்ளை அடக்குமுறை, ஒடுக்குமுறை இதெல்லாம் இல்லாத ஒரு தேசம் படைக்க வேண்டும்.  அது புரட்சியால் மட்டும் தான் முடியும். அந்த மகத்தான மக்கள் பணிக்கான புரட்சியை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம் அதில் போய் நீங்கள் அவரோடு சேர்ந்து விடுங்கள் இவரோடு சேர்ந்து விடுங்கள் என்று சொன்னால் எப்படி?'' என கேள்வி எழுப்பியுள்ளார் சீமான்

இதையும் படிங்க: சீமானுக்கு டாடா... பாஜகவுக்கு தாவும் சாட்டை துரைமுருகன்? - தம்பிகள் கதறல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share