×
 

சம்மனை கிழிக்கச் சொன்னதே நான் தான்... முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்..! - கயல்விழி

நடிகை வழக்கில் ஏற்கனவே மூன்றரை மணி நேரம் விசாரணைக்கு ஒத்துழைத்தார் சீமான். எங்களை மனரீதியாக துன்புறுத்த காவல்துறை திட்டமிட்டு இதனை செய்துள்ளது

''சம்மனை கிழிக்கச் சொன்னது நான்தான். முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள்'' என  நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனைவி கயல்விழி சவால் விடுத்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமி பாலியல் புகாரில் விசாரணைக்கு சீமான் நேற்று ஆஜராகாததால், அவரது நீலாங்கரை வீட்டின் முன் உள்ள நுழைவு வாரில் சுவற்றில் காவல்துறையினர்  நேற்று மீண்டும் சம்மனை ஒட்டிச் சென்றனர். அதை போலீஸார் முன்பே சீமானின் உதவியாளர் கிழித்து எறிந்ததால், கைது செய்ய வந்த நீலாங்கரை காவல் ஆயாளர், காவலர்களுடன் வந்து சீமானின் வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்த போது அங்கிருந்த காவலாளிக்கும் , காவல்துறையினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

போலீஸாரை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வெடிகுண்டு வைப்பதாக மிரட்டிய வழக்கில் ஈரோடு கருங்கல் பாளையம் காவல்துறையினர் இரண்டாவது முறையாக சம்மன் அளிக்க இன்று சீமான் வீடிற்கு வருவதாக தகவல் வெளியான நிலையில் சீமானின் நீலாங்கரை வீட்டின் முன் ''சம்மனை இங்கே ஒட்டிச் செல்லவும்'' பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சீமான் வீட்டில் போலீஸாருக்கு காத்திருக்கும் ஷாக்… கயல்விழியின் செம ஐடியா..!


இந்நிலையில் சீமான் வீட்டில் என்ன நடந்தது? என அவரது மனைவி கயல்விழி செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். ''நேற்று போலீசார் வருவதாக கூறியிருந்தார்கள். போலீசார் வந்தால் சம்மனை கையெழுத்திட்டு வாங்கிக் கொள்ளலாம் என்றிருந்தேன். என்னிடம் பேசாமல் சம்மனை எப்படி ஒட்டிச் செல்லலாம்? போலீசார் ஒட்டிச் சென்ற சம்மனை நான்தான் கிழிக்கச் சொன்னேன். முடிந்தால் என்னை கைது செய்யட்டும்.

வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் மீது எந்த தவறும் இல்லை. போலீசார் திட்டமிட்டே கைது செய்துள்ளனர். அந்தம்மா (விஜயலட்சுமி) எத்தன நாளாக பேசிக் கொண்டு இருக்கிறார். அவரை (சீமானை) அசிங்கப்படுத்தத்தானே பாலியல் குற்றம், பாலியல் குற்றம்னு போடுறீங்க. அவருக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்க என்ன மரியாதை கொடுக்குறீங்க?

பாலியல் வழக்கின் விசாரணையை விரைவு செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது. அதற்காக அடுத்த நாளே வீட்டுக்கு வருவீர்களா? நடிகை வழக்கில் ஏற்கனவே மூன்றரை மணி நேரம் விசாரணைக்கு ஒத்துழைத்தார் சீமான். எங்களை மனரீதியாக துன்புறுத்த காவல்துறை திட்டமிட்டு இதனை செய்துள்ளது

எங்களை அசிங்கப்படுத்துகிறீர்களா? காவல் ஆய்வாளர் பிரவீனுக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடருவோம். எங்கள் வீட்டு பாதுகாவலர் துப்பாக்கியை எடுத்துதான் கொடுத்தார்; மிரட்டவில்லை.  அவர் மக்களுக்கான நேர்மையான தலைவர். நேர்மையான தலைவர் என் கணவர் சீமான், சிறையை கண்டு எங்களுக்கு பயமில்லை. தன் மீதான வழக்குகளை சீமான் சட்டப்படி சந்திப்பார்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அந்த வீராப்பு என்னாச்சு அண்ணே… பதறியடித்து ஃப்ளைட் பிடித்து ஓடி வரும் சீமான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share