×
 

செருப்பு போடமாட்டேன் ..சாட்டையில் அடித்துக்கொள்வேன் .. திமுகவுக்கு எதிராக அதிரடி காட்டும் அண்ணாமலை

தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் சபதம் எடுத்துள்ளார் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன்  சபதம் எடுத்துள்ளார் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

கோவையில்  தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத தி.மு.க அரசை கண்டித்து நாளை முதல் பா.ஜ.க வினர் தங்களது வீட்டின் முன்பு நின்று போராட்டம் நடத்துவார்கள் எனவும், அண்ணா பல்கலை. வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாம் அனைவரும் வெட்கித்தலை குனிய வேண்டிய நிகழ்வு எனவும், இதற்காக நாளை காலை கோவையில் உள்ள தனது இல்லம் முன்பு நின்று ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொள்ள உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை  பல்கலைக்கழக வன்கொடுமையில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ள குற்றவாளி தி.மு.க வில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். துணை முதல்வர் உட்பட பல்வேறு அமைச்சர்களோடு அவர் புகைப்படம் எடுத்து நெருங்கிய தொடர்பில் இருந்து உள்ளார் என்றும் தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை இப்போதில் இருந்து செருப்பு அணிய மாட்டேன் என உறுதி ஏற்கிறேன். 48 நாட்கள் விரதம் இருந்து முருகனின் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்து தி.மு.க விற்கு எதிரான அரசியலை மிக தீவிரமாக முன்னெடுக்க உள்ளோம் எனவும்  தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ..பாஜக தமிழிசை கடும் தாக்கு

இதையும் படிங்க: மாணவிக்கு நேர்ந்த கொடூரம் ..கைதானவர் திமுகவை சேர்ந்தவரா?..அமைச்சர் விளக்கம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share