×
 

ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே இணைந்தால் வரவேற்பேன்.. சுப்ரியா சுலே மகிழ்ச்சி..!

ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே இருவரும் இணைந்தால் நான் மகிழ்ச்சியடைவேன் என்று தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா அரசியலில் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, சிவசேனா உத்தவ் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இருவரும் இணைந்தால் நான் மகிழ்ச்சியடைவேன் என்று தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயம் என்று ஆளும் பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராகவும், மராத்திய மக்களின் நலனையும், மொழியையும் காக்கும் பொருட்டு, 20 ஆண்டுகளுக்குப்பின் நவநிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்ரேவும், சிவேசனா உத்தவ் கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரேவும் இணைய உள்ளனர்.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்..! 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணையும் உத்தவ் தாக்கரே-ராஜ் தாக்கரே..!

இது தொடர்பாக இருவரும் தங்களின் விருப்பத்தையும், கருத்துக்களையும் பொதுவெளியில் பகிர்ந்துள்ளனர். தங்களுக்குள் இருக்கும் சிறு சண்டைகளை மறந்து, மராத்திய மக்களின் நலனுக்காக, மொழித்திணப்பை எதிர்த்தும் இருவரும் இணைந்து செயல்பட உள்ளதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் கட்சியின் மக்களவை எம்.பி. சுப்ரியா சுலே கூறுகையில் “எங்களுக்குள் இருக்கும் சிக்கலைவிட, மகாரஷ்டிராவில் தற்போது இருக்கும் பிரச்சினைதான் பெரியது என்று ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி. சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே இப்போது உயிரோடு இருந்தால், அவர்  மிகமிக மகிழ்ச்சியடைந்திருப்பார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் நலனுக்காக இரு சகோதரர்களும் ஒன்றாக இணைகிறார்கள், இதை நாங்கள் அனைவரும் முழு மனதுடன் வரவேற்கிறோம்” எனத் தெரிவித்தனர். சிவசேனாவின் மறைந்த தலைவர் பால் தாக்ரேயின் சகோதரர் மகன் ராஜ் தாக்கரே. பால் தாக்ரேவுக்கு பின் ராஜ்தாக்ரேதான் கட்சிக்குள் முக்கியத்துவமான இடத்தில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டபோது அவரை உயரவிரவிடாமல் பால்தாக்கரே தடுத்தார். இதனால் ஏற்பட்ட மனகசப்பில் சிவசேனா கட்சியைவிட்டு விலகிய ராஜ் தாக்கரே 2005ம் ஆண்டு மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ் தாக்கரே கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 13 எம்எல்ஏக்களை வென்றார். அதன்பின் எந்த தாக்கத்தையும் அரசியலில் ஏற்படுத்தவில்லை. மகாராஷ்டிராவில் இரு பெரும் சக்திகளாக இருக்கும் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா,சிவசேனா உத்தவ் கட்சி இணைந்து செயல்பட்டால் பெரிய தாக்கத்தை எதிர்க்கட்சியில்ஏற்படுத்த முடியும். பாஜகவுக்கு எதிராக சிறப்பாக தேர்தலில் செயல்பட முடியும்.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்..! 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணையும் உத்தவ் தாக்கரே-ராஜ் தாக்கரே..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share