ஆட்சியை பிடிங்க அடுத்த ஆண்டு வந்து தமிழில் முழுமையாக பேசுகிறேன்....பிரசாந்த் கிஷோர் பேச்சு
தமிழகத்தில் மோசமான விஷயம் ஊழல் அரசியலும், வாரிசு அரசியலும் தான் என பிரசாந்த் கிஷோர் விமர்சித்தார். இதை தவிர்த்தால் தமிழகம் வேற லெவலுக்கு போகும் என்று தெரிவித்தார்.
தவெகவின் 2 ஆம் ஆண்டு தொடக்கவிழா மாமல்லபுரம் நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. அதில் பிரசாந்த் கிஷோர் கலந்துக்கொண்டார். கூட்டத்தில் பேசும் முன் கெட் அவுட் ஹாஷ்டேக்கில் அனைவரும் கையெழுத்திட்டனர். அப்போது புஸ்ஸி ஆனந்த் பிரசாந்த் கிஷோரிடம் கையெழுத்து போடச்சொல்ல முடியாது என அவர் மறுத்துவிட்டார். இதை விஜய் கவனிக்கவில்லை.
இதன் பின்னர் கூட்டம் தொடங்கியவுடன் பிகே பேச ஆரம்பித்தார். அவரது பேச்சு வருமாறு...
பொதுவாக வெளி மாநிலத்திலிருந்து வருபவர்கள் வணக்கம் என்று தமிழில் சொல்வார்கள் அதை கேட்கும் தமிழர்கள் மிகுந்த சந்தோஷம் அடைவார்கள் நானும் வணக்கம் என்று சொல்லி ஆரம்பிக்கிறேன்.
நான் விஜய்யிடம் பேசியபோது எனக்கும் அவருக்கும் உள்ள ஒருமித்த கருத்து, ஒற்றுமை குறித்து பேசினோம். எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டு மக்களுக்கான முன்னேற்ற சிந்தனையில் இருவருக்குமிடையே உள்ள ஒருமித்த கருத்து. அந்த மாற்றத்தை அவர் எவ்வாறு கொண்டுவர விரும்புகிறார் என்றால் மதிப்பளிப்பது, அனைவருக்குமான வாய்ப்பு, ஜாதி மத வேறுபாடின்றி அனைவருக்குமான வாய்ப்பு, அனைவருக்குமான மதிப்பு, மரியாதை போன்றவை காரணமாக என்னால் முடிந்த சிறிய காரியமானாலும் செய்வேன்.
இதையும் படிங்க: அந்த வார்த்தையைக் கூட சொல்ல மாட்டேன்... கெத்து காட்டிய விஜய்... திமுகவுக்கே டப் கொடுத்த தருணம்...!
அதிகமானவர்கள் தவெக பிகே இணைந்தால் வெல்வதற்கு நல்ல வாய்ப்பு என்று நினைக்கிறார்கள். அதிகமானவர்கள் குறிப்பாக இளைஞர்கள் இது வெற்றிகரமாக அமையும் என்று நினைக்கிறார்கள். சிலர் சந்தேகத்துடன் அணுகுகிறார்கள். நான் சொல்கிறேன் நீங்கள் வெற்றி அடைந்தாலும் அல்லது இறுதி முடிவு எதுவாக இருந்தாலும் நான் எதுவும் செய்ய முடியாது. அது உங்களாலும், உங்கள் தலைவர்கள், கட்சி ஊழியர்களாலும், ஆதரவாளர்களின் உழைப்பால் மட்டுமே சாத்தியம்.
பிறகு நான் ஏன் இங்கு வந்தேன். 4 ஆண்டுகளாக நான் எந்த கட்சிக்கும், தலைவருக்கும், வேலை செய்வதில்லை என ஓய்வை அறிவித்து விட்டேன்.2021-ல் தமிழகம், மேற்கு வங்கத்தில் வேலை செய்துவிட்டு ஒதுங்கி விட்டேன். ஓய்வை அறிவித்து விட்டேன். ஆனால் மீடியாக்கள் என்னை வியூக வகுப்பாளர் என்றே அழைக்கின்றனர்.
நான் வியூக வகுப்பாளராக இங்கு வரவில்லை, உங்களுக்கு வியூக யுத்தி தேவையில்லை. நான் எனது சகோதரர் விஜய்க்கு உதவ வரவில்லை. அவருக்கும் என்போன்றோர் உதவி தேவை இல்லை. நான் வந்ததற்கு காரணம் நான் எந்த அரசியல் தலைவருக்கும் உதவுவதில்லை என்று அறிவித்தேன். ஆனால் விஜய் அரசியல் தலைவரல்ல, அவர் நம்பிக்கை, அரசியலின் நம்பிக்கை. தமிழகத்தின் புதிய நம்பிக்கை. தவெக அரசியல் கட்சியல்ல, அது லட்சக்கணக்கான இளைஞர்கள் கொண்ட இயக்கம், மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள், 35 ஆண்டுகாலமாக உள்ள அரசியலை மாற்றத்துடிக்கும் இளைஞர்கள் கொண்ட இயக்கம். அப்படிப்பட்ட இளைஞர்களின் நம்பிக்கையாக விஜய் இருக்கிறார்.
ஆனால் விஜய் அரசியல் தலைவரல்ல, அவர் நம்பிக்கை, அரசியலின் நம்பிக்கை. தமிழகத்தின் புதிய நம்பிக்கை. தவெக அரசியல் கட்சியல்ல், அது லட்சக்கணக்கான இளைஞர்கள் கொண்ட இயக்கம், மாற்றத்தை விரும்புன் இளைஞர்கள், 35 ஆண்டுகாலமாக உள்ள அரசியலை மாற்றத்துடிக்கும் இளைஞர்கள் கொண்ட இயக்கம். அப்படிப்பட்ட இளைஞர்களின் நம்பிக்கையாக விஜய் இருக்கிறார்.
நான் இந்தியா முழுவதும் சுற்றி இருக்கிறேன். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நிலை. கடைசி 15 ஆண்டுகளாக குஜராத் மாடல்தான் சிறந்தது என திணிக்க பார்க்கிறார்கள். ஆனால் என்னை பொறுத்த வரை தமிழ்நாடு மாடல் வளர்ச்சிதான் சிறந்தது என்பேன்..ஆனால் தமிழ்நாடு 3 விஷயங்களை ஒதுக்கி வைக்கணும். மதச்சார்பு, ஊழல், வாரிசு அரசியல் இவை மூன்றையும் களை எடுக்கணும்.
இதை 3 ஐயும் எடுத்துவிட்டால் தமிழ்நாடு மாடல் சரியாக இருக்கும். மற்ற மாநிலங்களும் இதை பின்பற்றும். இதை தவெக ஆட்சிக்கு வந்தால் நடக்கும். அரசியல் ஊழல் கட்டற்று செல்கிறது. எவ்வளவோ மாநிலங்கள் பின் தங்கி இருக்கிறது. அரசியலில் ஊழல் என்றால் தமிழகம் மோசமான மாநிலம் என்று சொல்வேன்.
நாடு முன்னேறி விட்டது என்று சொல்கிறோம். ஆனால் பிரதமர் போய் இந்தியா வல்லரசாகி விட்டது என்கிறார். ஆனால் நாட்டில் 20% மக்கள் பயத்துடனே வாழ்ந்தால் அங்கு எப்படி வளர்ச்சி இருக்கும். ஆனால் நமது முன்னோர் தலைவர்கள் பிரிவினைவாதத்தை ஏற்றதில்லை. தமிழகம் மத பிரிவினை வாதத்திற்கு எதிராக இருப்பதற்கு நான் தமிழகத்திற்கு நன்றி சொல்கிறேன்.
மூன்றாவது வாரிசு அரசியல், அதில் நாம் யாரும் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை, கொஞ்சம் யோசித்து பாருங்கள் சுனில் கவாஸ்கர் மகனும், கபில் தேவ் மகனும் மட்டுமே கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தால் இந்தியாவில் தோனி, சச்சின், விராட் கோலி போன்ற சிறந்த வீரர்கள் வந்திருக்க முடியுமா?
தோனி என்னை விட பிரபலமானவர். இருவரும் பிஹாரி. தோனி தமிழ்நாட்டுக்காக சி.எஸ்.கேவுக்காக விளையாடி பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார். நான் அவருடன் போட்டிபோட்டு டிவிகே வெற்றிக்கு உதவினால் என்னை தோனியை விட பிரபலமானவர் என்று ஏர்றுக்கொள்வீர்களா?
தவெக வெற்றிக்காக 3 'C' க்களை சொல்வேன். Courage, Compassion, commitment இந்த C க்கள் இருந்தால் வெற்றி நிச்சயம். உங்களிடம் தைரியம் இருந்தால் அநீதியை எதிர்த்து நிற்கவேண்டும், யாரெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தால் தனித்து விடப்படுகிறார்களோ, அவர்களுடன் நின்று உதவி செய்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவவேண்டும்.
கமிட்மெண்ட் என்பது அடுத்த 100 நாளில் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 மடங்காக உயர வேண்டும். செய்வீர்களா? இது எனக்கு கொடுக்கும் உறுதிமொழி அல்ல உங்கள் தலைவர்களுக்கு கொடுப்பது. ஒருவர் 10 பேரை கட்சிக்கு கொண்டுவரவேண்டும். அதை செய்தால் தவெக வலுவடையும். இதை செய்தால் நான் இப்போது தமிழில் வணக்கம் சொல்கிறேன், எனக்கு தமிழ் தெரியாது, ஆனால் புரிந்துக்கொள்ள முடியும். அடுத்த ஆண்டு தவெக வென்றால் உங்களில் பலர் பாலிசி மேக்கர்ஸ், தலைவர்கள், விஜய்க்கு கீழே பணியாற்றுவீர்கள், அப்போது வந்து தமிழில் நன்றி உரையாற்றுவேன்”. இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க: 'மனசிலாயோ...' விஜய் வீட்டிற்கு செருப்பை வீசி மெசேஜ் கொடுத்த மலப்புரம் மணி..!