இன்னும் 13 நாடுகளில் சிம்பொனி இசை... இளையராஜா பெருமிதம்..!
சிம்பொனி இசையை முடித்துவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
லண்டனில் சிம்பொனி அரங்கேற்றத்தை முடித்துவிட்டு, சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு, தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இளையராஜாவின் முதல் சிம்பொனி நிகழ்ச்சி லண்டனில் உள்ள ஈவென்ட் அப்பல்லோ அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவுடன் அரங்கேற்றம் செய்யப்பட்ட வேலியண்ட் சிம்பொனி இசையைக் கேட்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
இதையும் படிங்க: இளையராஜாவுக்கு இசை ஞானியைவிட மெய் ஞானியே பொருத்தம்.. நேரில் சந்தித்து வியந்த திருமாவளவன்.!
இதன் மூலம், சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை திரும்பிய இளையராஜாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார்.
சென்னை விமான நிலையத்தில் இளையராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 13 நாடுகளில் சிம்பொனி இசையை அரங்கேற்ற உள்ளதாக கூறினார்.அக்டோபர் 6 துபாயிலும், செப்டம்பர் 6 பிரான்சிலும் சிம்பொனி இசையை அரங்கேற்ற உள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாடு அரசு சார்பில் தன்னை வரவேற்க உத்தரவிட்டது நெகிழ்ச்சியாக உள்ளது என்றும் மிகவும் மகிழ்வான இதயத்தோடு வழியனுப்பி வைத்ததால் வெற்றி கிடைத்ததாகவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியையும் தெரிவித்தார்.
இசை கோர்ப்பாளரே ஆச்சரியமடையும் அளவுக்கு ஆரவாரம் இருந்தது என்றும் இந்த நிகழ்ச்சியில் 80 பேர் வாசித்தனர். சிம்பொனியின் இரண்டாவது பிரிவில் தனது பாடலையும் பாடியதாகவும் கூறினார். 81 வயது ஆகிவிட்டது , இனி இவர் என்ன செய்ய போகிறார் என நினைக்காதீர்கள். இனிதான் ஆரம்பமே என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, லண்டனில் சிம்பொனி இசைத்து தமிழ்நாட்டிற்கு இளையராஜா பெருமை சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக எம்.பி.க்கள் கூட்டம் - முப்பெரும் தீர்மானங்கள் நிறைவேற்றம்