அடுத்து 3 மணி நேரம் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?
அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது. ஒருபக்கம் வெயில் அடித்தாலும் மறுபக்கம் மழையும் பெய்து வருகிறது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்குத் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுக்குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டலக் கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்குத் திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதையும் படிங்க: திருப்பூரை புரட்டிப்போட்ட மழை..! மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!
தமிழகத்தில் இன்று ஏப்ரல் 14ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை ஏப்ரல் 15ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
வரும் ஏப்ரல் 16 முதல் 18 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (14-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: லீவு விட்ட வெயில்... மகிழ்ச்சியில் மக்கள்... வானிலை மையம் கொடுத்த குளுகுளு அப்டேட்!!