×
 

வீட்ட வாடகைக்கு விட்டு இருக்கீங்களா? வருமான வரித்துறையில் சொல்வது உங்களுக்குதான்!!

50 ஆயிரத்திற்கு மேல் வாடகை வாங்கும் வீட்டின் உரிமையாளருக்கு வருமான வரித் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

மாதம் 50 ஆயிரத்திற்கு மேல் வாடகை செலுத்தும் போது அதற்கு டிடிஎஸ் கழிக்கப்படுவது வழக்கம். ஆனால் 2024 பட்ஜெட்டில், டிடிஎஸ் விகிதம் 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது. அதன்படி மாத வாடகை 50 ஆயிரம் அல்லது அதற்கு மேல் உள்ள தொகை வசூலிக்கும் போது 2 சதவீதம் தொகையை வீட்டின் உரிமையாளருக்கு செலுத்தும்போது, டிடிஎஸ் பிடித்து அதனை வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும். 50 ஆயிரம் ரூபாயில் 2 சதவீதம் டிடிஎஸ் தொகை என்பது ஆயிரம் ரூபாய். இதுவே தற்போது நடைமுறையில் உள்ளது.

 இந்த நிலையில் வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் நீங்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வீட்டு வாடகை அலவன்ஸ் (HRA) கோரியுள்ளீர்கள் என்றும், ஆனால் அதில் TDS கழிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உங்கள் கோரிக்கையைக் குறைத்து புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை தாக்கல் செய்ய விரும்பினால், அதைச் செய்ய இதுவே சரியான நேரம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதுக்குறித்து அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் அபிஷேக் முரளி கூறுகையில், நாடு முழுவதும் உள்ள பல வரி செலுத்துவோருக்கு இந்த அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட வீட்டின் வாடகைதாரராக இருந்து 50 ஆயிரம் அல்லது அதற்கு மேல் வாடகை செலுத்தினால், வருமான வரிச் சட்டப்படி, வீட்டின் உரிமையாளருக்கு 2 சதவீதம் டிடிஎஸ் கழிக்க வேண்டும்.

எனவே டிடிஎஸ் கழிக்கும் பொறுப்பு வீட்டின் வாடகைதாரர்களுக்கு உள்ளது. வாடகைதாரர் அவ்வாறு செய்யத் தவறினால், அந்த நபர் தவணை தவறிய மதிப்பீட்டாளராகவே வருமான வரித்துறையால் கருதப்படுவார்.

இதையும் படிங்க: என்னது சம்மதிச்சிட்டிங்களா..! அமெரிக்க வரிக்குறைப்பு குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும்.. காங்கிரஸ் வலியுறுத்தல்..!

பின்னர் வருமான வரித் துறை அவருக்கு வட்டி மற்றும் அபராதம் விதிக்கும். இது தனிப்பட்ட வழக்குகள் மற்றும் தவணை தவறிய நேரத்தைப் பொறுத்து மாதத்திற்கு 1 முதல் 1.5 சதவீதம் வரை அபராதத்தொகை மாறுபடும். அதேநேரம் இதற்கும் ஒரு விலக்கு உள்ளது. வீட்டு உரிமையாளர் தனது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து வாடகை வருமானத்தைக் காட்டி, அதன் அடிப்படையில் முறையாகக் கணக்கிடப்பட்ட வரிகளைச் செலுத்தியிருக்க வேண்டும்.

அத்துடன் இந்த தகவலை வருமான வரி மதிப்பீட்டு அதிகாரியிடம் நீங்கள் வழங்க வேண்டும். அப்படி செய்தால் உங்களை நிலுவையில் உள்ள வரி செலுத்துபவராக வருமான வரித்துறை கருதாது.. மேலும் ஒரு ரூபாய் கூட வட்டியாகவோ அல்லது அபராதமாகோ நீங்கள் செலுத்த வேண்டியதில்லை. எனினும், சில நில உரிமையாளர்கள் சில ரகசிய/தனிப்பட்ட ஆவணங்களைப் பகிர்ந்து கொள்வதை விரும்பமாட்டார்கள்.

எனவே, வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளராக வருமான வரித்துறை உங்களுக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பக்கூடாது என்றால், வாடகைதாரர் என்ற முறையில் டிடிஎஸ்-ஐ சரியான நேரத்தில் கழித்து அனுப்புவது நல்லது என்றார்.

இதையும் படிங்க: வரியைக் குறைக்க இந்தியா சம்மதம்..! வெளிப்பட்டுவிட்டார்கள்... தரக்குறைவாகப் பேசிய அதிபர் ட்ரம்ப்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share