ஈஸியா வருமான வரி ரிட்டனை எப்படி தாக்கல் செய்யலாம்..?
எளிதாக வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்வது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க...
நிதியாண்டு முடியும் தருவாய் வந்துவிட்டாலே வருமான வரி ரிட்டன் செய்ய ஆடிட்டர்களை நோக்கி நம்மில் பலர் ஓடுவதைக் காண முடியும். கடைசி நேரத்தில் ரிட்டன் செய்யும் போது அதற்குரிய கட்டணமும் அதிகமாக வழங்க வேண்டிய சூழலும் இருந்திருக்கும். இதையெல்லாம் தவிர்க்கும் விதத்தில் எளிமையாக வீட்டில் இருந்தே சுயமாகவே வருமானவரி ரிட்டனை, எந்தவிதமான செலவும் இன்றி நமக்கு நாமே தாக்கல் செய்யலாம்.
யாரெல்லாம் வருமாவரி தாக்கல் செய்ய வேண்டும்?
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்வது அவசியம். வருமானவரி வரம்புக்குள் வருபவர்கள் மட்டுமே ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என்பதில்லை, வரி வரம்புக்குள் வராதவர்களும் தாக்கல் செய்யலாம். வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்தபின் வரிவிலக்கு பலனைப் பெற, ரிட்டன் தாக்கல் செய்தவர்களுக்கு மட்டுமே அதன் பலன் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் வங்கிகளில் வீட்டுக் கடன் அல்லது வாகனக் கடன் கேட்டுச் செல்லும்போது வருமான வரிரிட்டன் இருந்தால் கடன்முன்னுரிமை வழங்கப்படும்.
இதையும் படிங்க: மச்சானுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி: சவுக்கு சங்கரின் டார்க்கெட்: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!
வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமானவரி செலுத்தத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யத் தேவையில்லை என்று கூறவில்லை.
எப்படி வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்வது?
1. வருமானவரி இணையதளமான (https://www.incometax.gov.in/iec/foportal/) சென்று உங்களுக்குத் தனியாக கணக்கு உருக்க வேண்டும்.
2. அதன்பின் அத்தியாவசிய ஆவணங்களான பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கி ஸ்டேட்மென்ட், ஃபார்ம் 16 அல்லது சேலரி ஸ்லிப் மற்றும் வேறு எதிலிருந்து வருமானம் வரக்கூடிய முதலீடுகள், சொத்துக்கள் விவரங்களை வைத்துக்கொள்ள வேண்டும்.
3. வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்வதில் பல படிவங்கள் உள்ளன. குறிப்பாக ஐடிஆர்-1(சஹாஜ்), ஐடிஆர்-2, ஐடிஆர்-3, ஐடிஆர்-4, ஐடிஆர்-5, ஐடிஆர்-6 மற்றும் ஐடிஆர்-7 ஆகியவை உள்ளன. இந்த ஐடிஆர் படிவத்தில் உங்களுக்குரிய படிவத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
4. அதன்பின், வருமானவரித்துறையின் இ-பைலிங் பிரிவில் சென்று பான்கார்டு எண், பாஸ்வேர்டை பதிவிட்டு திறக்க வேண்டும்.
5. இதில் “பைல் இன்கம்டேக்ஸ் ரிட்டன்” என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
6. அடுத்ததாக எந்த நிதியாண்டுக்கான ஐடி ரிட்டனைத் தாக்கல் செய்கிறீர்கள் என்பதை கிளிக்செய்ய வேண்டும். உதாரணாக 2024-25ம் ஆண்டுக்குரியது என்றால் அதை கிளிக் செய்ய வேண்டும்.
7. இதை முடித்தபின் தனிநபர்கள் விவரங்கள் வழங்கப்பட்டிருக்கும். இதில் இந்துக் கூட்டுக்குடும்பத்தில் வாழ்கிறீர்கலா அல்லது தனிநபரா என்பது கேட்கப்படும். அதில் உங்களுக்கு தகுதியானவற்றை கிளிக் செய்யலாம்.
8. இந்த செயல்முறை முடிந்தபின் ஏற்கெனவே குறிப்பிட்டபடி 7 வகையான ஐடிஆர் படிவங்கள் வரும். அதில் 1முதல் 4 வகை தனிநபர் மற்றும் கூட்டுக்குடும்ப முறைக்கானது.
9. உங்களுக்குரிய ஐடிஆர் படிவத்தை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விவரங்களை பதிவிட வேண்டும். உங்களின் பான் எண், ஆதார் எண், பிறந்த தேதி, வங்கி கணக்கு எண் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்.
10. நீங்கள் வருமான வரி செலுத்தும் வரம்புக்குள் வந்தால் வருமானத்தின் வகைகளை அதில் குறிப்பிட வேண்டும். வருமான வரிவிலக்கு விவரங்களான எல்ஐசி முதலீடு, வீட்டுக்கடனுக்கு வட்டி செலுத்துவது, குழந்தைகள் மீதான டெபாசிட் போன்றவற்றை குறிப்பிட வேண்டும்.
11. இந்தப் பணி முடிந்தபின் சப்மிட் அல்லது கன்ஃபார் என்பதை கிளிக் செய்து உறுதி செய்ய வேண்டும். இறுதியாக வருமானவரி செலுத்த வேண்டியதிருந்தால் செலுத்த வேண்டும்.
12. வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்தபின் உங்களின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஓடிபி மூலம், ரிட்டன் தாக்கல் செய்த நகலை பெறலாம்.
நமக்கு நாமே வருமானவரி ரிட்டன் செய்வதால் நன்மை என்ன?
நமக்கு நாமே வருமானவரி இணையதளத்தில் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது, ஆடிட்டருக்கு கொடுக்கக்கூடிய கட்டணம் மிச்சமாகும். சிலரிட்டனுக்கு ஆடிட்டர் கையொப்பம் தேவைப்படும் பட்சத்தில் அவரிடமே தாக்கல் செய்ய வேண்டும். நம்முடைய நேரத்துக்கு ஏற்ப, காலக்கெடு முடிவதற்குள் எப்போது வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம். சில நேரங்களில் கடைசி நேரத்தில் ஆடிட்டரிடம் கொண்டு செல்லும் தாக்கல் செய்வதில் தவறுகள் ஏற்படலாம். நாமே சுயமாக முன்கூட்டியே தாக்கல் செய்தால் வரி எவ்வாறு வேலை செய்கிறது, தனிப்பட்ட நிதித் திட்டமிடல் வளரும்.
இதையும் படிங்க: 3 கோடி டன் பால் உற்பத்திக்கு இலக்கு.. உலகிலேயே இந்தியாவை முதல் நாடாக்க மத்திய அரசு உறுதி..!