பிரதமர் மோடி, அமித் ஷாவால் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் கடுமையாக சமரசமாகியுள்ளது: ஜெய்ராம் ரமேஷ் விளாசல்
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரால் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் கடுமையாக சமரசம் செய்யப்படுகிறது என காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளரும், பொதுச்செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த 1950ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஜனவரி மாதம் 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக தேர்தல் ஆணையத்தால் கொண்டாடப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் கூறுகையில் “ இன்று சுயபாராட்டுக்கள் அதிகம் இருக்கின்றன. தேர்தல் ஆணையம் செயல்பாடு அரசியலமைப்பை கேலிகூத்தாக்குகிறது. வாக்காளர்களையே அவமதிக்கிறது. இன்று தேசிய வாக்காளர் தினம். தேர்தல் ஆணையம் 75 ஆண்டுகளுக்கு முன்பு 1950 ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கப்பட்ட நாளைக் குறிக்கும் வகையில், 2011ம் ஆண்டு முதல் முதல் இன்று தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு, இதன் முதல் தலைவராக சுகுமார் சென் நியமிக்கப்பட்டு, தேர்தல் ஜனநாயகத்தைக் காக்க உறுதிபூண்டார். 8 ஆண்டுகளாக தலைமைத் தேர்தல் ஆணையராக சுகுமார் சென் இருந்தார். 1951-52 முதல் தேர்தலை அற்புதமாக நடத்திக்காட்டினார். ஆனால் தலைமைத் தேர்தல் ஆணையராக சுகுமார் சென் பதவி ஏற்பதற்கு முன்பாகவே, வரைவு வாக்காளர் பட்டியல் தயாராக இருந்தது.
இந்தியா எவ்வாறு ஜனநாயகமானது என்ற நூலில் ஓர்னித் ஷானி எழுத்தாளர் வரலாற்றை அழகாக எழுதியுள்ளார். தேர்தல் ஆணையர்களில் வித்தியாசமானவராக டிஎன் சேஷன் விளங்கினார். தனித்துவமாக இருந்த, செயல்பட்ட சேஷன் பல்வேறு சீர்திருத்தங்களையும், பங்களிப்புகளையும் ஜனநாயகத்துக்காகச் செய்தார்.
இதையும் படிங்க: ஸ்டைலா கெத்தா..! ட்ரம்புக்கு நேருக்கு நேர் அமர்ந்த ஜெய்சங்கர்...! பதவியேற்பில் இந்தியாவுக்கு தனி மரியாதை!
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, சுதந்திரம் ஆகியவை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் கடுமையாக சமரசத்துக்குள்ளாகியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் சில முடிவுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்காக நிலுகையில் இருக்கின்றன. ஹரியானா, மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு அதிர்ச்சிக்குரியதாகவும், கவலைக்குரியதாகவும் இருந்தது.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இலவசங்களை எதிர்க்கும் பிரதமர் மோடி! வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய பாஜக: கெஜ்ரிவால் கிண்டல்