இந்தியாவின் முதல் ஆதார் அட்டை பெற்ற பெண் ரஞ்சனா சோனாவானே... அவரது நிலைமை தற்போது எப்படி..?
இந்தியாவின் முதல் ஆதார் அட்டை பெற்ற ரஞ்சனா சோனாவானேவின் நிலைமை தற்போது எப்படி இருக்கிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்று எதற்கெடுத்தாலும் ஆதார் அட்டை கேட்கும் நிலை உள்ளது. இந்த ஆதார் அட்டை இந்தியாவில் அறிமுகம் ஆகி ஏறத்தாழ 14 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகை வெளியிட்டு இருக்கும் ஒரு செய்தியில் நாட்டின் முதல் ஆதார் கார்டு பெற்ற ரஞ்சனா சோனாவானேவின் வாழ்க்கை கடந்த 14 ஆண்டுகளில் பெரும்பாலும் மாறாமல் தான் உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் சஹாடா தாலுகாவில் உள்ள டெம்பிளி கிராமத்தில் "ஆதார் அட்டை பெண்" என்று அழைக்கப்படும் ரஞ்சனா சோனாவானே வசித்து வருகிறார். 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி அன்று நடைபெற்ற முதல் ஆதார் அட்டை வழங்கும் மநிகழ்வில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதையும் படிங்க: நிலத்தகராறு பிரச்னைக்கு இப்படியா? திமுக பெண் நிர்வாகி அட்டூழியம்.. காரால் தகரக் கொட்டகையை இடித்து தள்ளி ஆவேசம்..!
சமீபத்திய அந்த ஆங்கிலப் பத்திரிகை இந்த ஆதார் அட்டைப்பெண் பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதில் கடந்த 14 ஆண்டுகளாக அவருடைய வாழ்க்கையில் பெரும்பாலும் மாற்றம் எதுவும் இல்லாமல் தான் போய்க்கொண்டிருக்கிறது என குறிப்பிடப்பட்டு இருந்தது.
மும்பையில் இருந்து 416 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள டெம்பிளி கிராமத்தில் மின்சாரம் மற்றும் சுகாதார வசதிகள் போன்ற அத்தியாவசிய தேவை வசதிகள் கூட இல்லை. பில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ரஞ்சனா பக்கத்து வீட்டுக்காரரிடம் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட மின்சாரத்தை பயன்படுத்தி தான் தனது வீட்டில் மின் விளக்கை எரிய வைக்கிறார். இதற்காக அவர் மாதம் 100 ரூபாய் செலுத்துகிறார். பெரும்பாலான கிராமவாசிகள் கழிப்பறை வசதி இல்லாமல் வாழ்வது போன்ற கஷ்டங்களைப் பற்றி அவர் செய்தியாளரிடம் பகிர்ந்து கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
துணிகளை தைப்பதின் மூலம் சொற்ப வருமானம் ஈட்டும் ரஞ்சனா, கணவர் மற்றும் இரண்டு மகன்கள் உள்பட தனது குடும்பத்தை ஆதரித்து வருகிறார். மூத்த மகன் உமேஷ் வணிகத்தில் முதுகலை பட்டம் படித்து வருகிறார். இளைய மகன் மகாராஷ்டிரா காவல் துறையில் சேர விரும்புகிறார். தன்னுடைய முயற்சிகள் இருந்தபோதிலும் நிதி நெருக்கடியில் தனது குழந்தைகளின்அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்காக சிறிய வேலைகளை தேட கட்டாயப்படுத்துவதாகவும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
ஆதார் அட்டை அறிமுகம் ஆவதற்கு முந்தைய நாட்களைப் பற்றி ரஞ்சனா கூறுகையில் கிராமத்திற்குள் ஒருவித நம்பிக்கையையும் எதிர்பார்ப்பும் அந்த சமயத்தில் நிலவியது. இருப்பினும் அதைத் தொடர்ந்து வந்தது ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.
திடீரென எங்கள் கிராமத்திற்கு கான்கிரீட் சாலைகள் வந்தன குடிசைகளுக்கு வண்ணங்கள் தீட்டப்பட்டன. வீடுகளில் மின்சார மீட்டர்கள் படுத்தப்படும் மாதாந்திர பில் 15 ரூபாய் என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் விழா நிகழ்வுகளுக்குப் பிறகு அடுத்த மாதம் முதல் மின்சார கட்டணம் 3000 ஆக இருந்தது. அதை எங்களால் செலுத்த முடியவில்லை. எனவே மின்சார துறை மீட்டர்களை எடுத்துச் சென்று விட்டது என்றும் அந்த பெண் கூறி இருக்கிறார்.
அரசாங்க அலுவலகங்களுக்கு திரும்பத் திரும்ப சென்று முறையிட்டாலும் நிர்வாகத்தின் அலட்சியத்தால் அவர் ஏமாற்றம் அடைந்து இருப்பதாக மேலும் கூறினார். மும்பையில் இருந்து ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று வந்து ஆதார் அட்டை பற்றி எங்களுக்கு கற்றுக் கொடுத்தது. 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணை வழங்குவதன் நோக்கம் சமூகப் பாதுகாப்பு திட்டங்களை சிறப்பாக வழங்குவதை உறுதி செய்வதாகும் என்று அவர்கள் கூறினார்கள்.
பின்னர் எங்களை அருகில் உள்ள ஒரு தொழிற்சாலைகங்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவர்கள் ஒரு சிறிய சோதனையை மேற்கொண்டனர். ஆதார் அட்டை மற்றும் அதன் நோக்கம் குறித்து எங்களிடம் கேட்டனர். நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம் இந்த முழு திட்டமும் நம் அனைவரையும் மறுமையில் இருந்து மீட்டெடுப்பதற்காகவே என்று நாங்கள் நினைத்தோம்.
மேலும் என் மகன்கள் வளர்ந்ததும் அவர்களின் இலவச கல்வி மற்றும் வேலைகள் கிடைக்கும். ஆனால் அவர்கள் (அரசியல்வாதிகள்) எங்கள் வறுமையில் இருந்து லைக்குகளையும் விளம்பரத்தையும் பெறுவதற்கும் ஊடக நிறுவனங்கள் தங்கள் செய்தூ சேனல்களுக்கு மதிப்பீடுகளை பெறுவதற்கும் ...அது ஒரு தவறான நிகழ்ச்சியாகவே நாங்கள் கருதுகிறோம்" என்று என்று தனது வயிற்று எரிச்சலை கொட்டிக்கொண்டார் .
ஆதார் அட்டையை பெற்ற முதல் நபராக இருப்பதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது ?அதை நான் ஒரு சாதனையாக பார்க்கவில்லை. எனக்கு லாட்டரியில் பரிசு வந்தது போல் இல்லை. அதிகாரத்தில் இருக்கும் பழங்குடி அமைச்சர்கள் இன்று பெரும்பான்மையாக இருக்கும் பழங்குடி சமூகத்திற்கு என்று எதுவும் செய்யவில்லை . ஆனால் அவர்கள் எந்த புத்துணர்ச்சியும் இல்லாமல் வாக்குகளை தேடி மீண்டும் வருகிறார்கள் என்றும் புலம்பினார் அந்த பேட்டியில் போது ரஞ்சனா.
இதையும் படிங்க: மனதை கலங்கடிக்கும் காட்சி..! ஜிம்மில் வீராங்கனைக்கு நேர்ந்த துயரம்!