×
 

ரூ.63,000 கோடிக்கு ரஃபேல் விமானம்... பிரான்சுடன் இந்தியா ஒப்பந்தம்!!

63 ஆயிரம் கோடி ரூபாயில் 26 ரஃபேல் விமானங்களை வாங்க பிரான்சுடன் இந்தியாவின் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்கியிருந்தது. ஏற்கனவே, 36 ரஃபேல் விமானங்கள் வாங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, கடற்படைக்கும் ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில், ரூ.63,000 கோடியில் 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 22 விமானங்கள் ஒற்றை இருக்கை கொண்ட விமானங்களாகவும், இரண்டு இருக்கை கொண்ட 4 போர் விமானங்கள் என மொத்தம் 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. முன்னதாக 2023 ஆம் ஆண்டு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மூன்றுக திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: அமைதியை விரும்பும் பாக்,.. சொந்த மக்களைக் கொல்லும் இந்தியா.. அப்ரிடியின் அபத்த வீடியோ..!

அதில் பிரான்சிடம் இருந்து 26 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதும் ஒன்று. மேலும் இந்த கூட்டத்தில் பிரான்சிடம் இருந்து கடற்படை பயன்பாட்டுக்காக ரஃபேல் விமானங்களுடன் தொடர்புடைய துணை உபகரணங்கள், ஆயுதங்கள், உதிரிபாகங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது.

அதில் பிரான்சிடம் இருந்து 26 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை அடுத்து 63 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பிரான்சிடம் இருந்து 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது என மத்திய அரசு முடிவு செய்தது. இந்த நிலையில், 26 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி உள்ளது. இந்த விமானங்கள் அனைத்தும் 2031 ஆம் ஆண்டுக்குள் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: திருப்பதி அருகே நிகழ்ந்த கோர விபத்து.. 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share