×
 

பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் அளிக்கிறது..! பாகிஸ்தான் இந்தியா கடும் தாக்கு….

தோல்வி அடைந்த நாடான பாகிஸ்தான் மற்ற நாடுகளுக்கு அறிவுரை கூற தேவை இல்லை என ஐநாவில் இந்தியா கடுமையாக சாடியுள்ளது.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் பேசியதற்கு இந்தியா சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா கூட்டத்தில் பேசியிருந்த பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் அசாம் நசீர், காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறி அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என பேசியதாக தெரிகிறது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக கூட்டத்தில் பேசிய இந்திய தூதர் க்ஷிதிஜ் தியாகி, அந்த நாட்டு ராணுவ பயங்கரவாதியினர் எழுதிக் கொடுப்பதை பாகிஸ்தான் தலைவர்கள் பேசி வருவது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். பாகிஸ்தானின் கருத்துக்கள் அதன் பாசாங்குத்தனத்தையும், மனிதாபிமானமற்ற செயல்களையும், திறமையின்மையையும் வெளிப்படுத்துவதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கோட்சேவை புகழ்ந்த பேராசிரியை… சைஜா ஆண்டவனுக்கு பரிசாகக் கிடைத்த 'டீன்' பதவி..!

இந்தியா ஜனநாயகம், முன்னேற்றம் மற்றும் மக்களின் கண்ணியத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவதாக கூறிய அவர், இதை இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டிய மதிப்புகள் என தெரிவித்துள்ளார்.

சொந்த உள்நாட்டு நெருக்கடிகளை தீர்க்க தவறிய பாகிஸ்தான் சர்வதேச தலங்களை தவறாக பயன்படுத்தி இந்தியாவிற்கு எதிரான பேச்சுக்களை தூண்டி வருவதாக குற்றம் சாட்டினார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பிரிக்க முடியாத பகுதியாக இருக்கும் என திட்டவட்டமாக கூறிய அவர், கடந்த சில ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பொருளாதார, சமூக முன்னேற்றங்களே அதன் நிலைமையை எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் தன்னுடைய மக்களுக்கு உண்மையான ஆட்சி மற்றும் நீதியை வழங்குவதில் கவனம் செலுத்தலாம் என்றும் ஐநா சபையால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் வெட்கமின்றி அடைக்கலம் அளிப்பதாகவும் எனவே தோல்வி அடைந்த நாடான பாகிஸ்தான் மற்ற நாடுகளுக்கு உபதேசம் செய்யும் நிலையில் இல்லை எனவும் கடுமையாக சாடி உள்ளார்.

இதையும் படிங்க: அசாமில் திடீர் நில அதிர்வு... ரிக்டர் அளவு கோலில் 5ஆக பதிவு..! அதிர்ச்சியில் மக்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share