×
 

பிரதமரின் இரண்டாம் முதன்மை செயலாளர் பதவி. தட்டித் தூக்கிய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்..!

பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது முதன்மைச் செயலாளராகர இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸை  நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு சுற்றறிகை வெளியிட்டுள்ளது. அதில், "பிரதமரின் முதன்மைச் செயலாளர்-2 ஆக சக்திகாந்த தாஸை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து அவரின் நியமனம் அமலுக்கு வரும். அவரின் பதவிக் காலம் பிரதமரின் பதவிக் காலம் முடியும் வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும்.

மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பி.கே.மிஸ்ரா, 2019 செப்டம்பர் 11 முதல் பிரதமரின் முதன்மைச் செயலாளராக இருந்து வருகிறார். அவருடன் முதன்மைச் செயலாளர்-2 ஆக சக்திகாந்த தாஸ் இருப்பார்" என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1957இல்  ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் பிறந்தவர் சக்திகாந்த தாஸ். இவர் வரலாற்றில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை டெல்லி புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் முடித்தார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான இவர், 1980 பேட்ச் தமிழ்நாடு கேடராவார். இவர் தமிழகம் மற்றும் மத்திய அரசுகளில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். உர்ஜித் படேல் ராஜினாமா செய்த பிறகு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: குங்குமப்பூ சட்டை… கையில் ருத்ராட்ச மாலை… கங்கையில் நீராடி பக்தி பரசவசத்தில் மூழ்கிய பிரதமர் மோடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share