×
 

நாடு கடத்தும் முடிவு..! அமெரிக்க அரசுக்கு எதிராக இந்திய மாணவர் உள்பட 4 பேர் நீதிமன்றத்தில் வழக்கு..!

அமெரிக்க அரசுக்கு எதிராக இந்திய மாணவர் உள்பட 4 பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அமெரிக்காவில் மிச்சிகன் பல்கலைக்கழக்தில் பயிலும் இந்திய மாணவர் உள்பட 4 பேரை அமெரிக்க அரசு நாடு கடத்தும் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்திய மாணவர் சின்மயி தியோரே, சீனாவைச் சேர்ந்த ஜியாங்யுன் மற்றும் கியு யாங், நேபாளத்தைச் சேர்ந்த யோகேஷ் ஜோஷி ஆகியோர் சேர்ந்து அமெரிக்காவின் உள்துறை அமைச்சகத்துக்கும், குடியேற்ற அதிகாரிகளுக்கும் எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர். 

மாணவர்களுக்கு ஆதரவாக மிச்சிகனில் உள்ள அமெரிக்கன் சிவில் லிபரெட்டிஸ் யூனியன் மனுத்தாக்கல் செய்து ஆஜராக உள்ளது. அவர்கள் தாக்கல் செய்த மனுவில் “தங்களின் மாணவர் விசா சட்டவிரோதமாக ரத்து செய்யப்பட்டுள்ளது, அதற்கு முன்பாக எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் இல்லை, விளக்கம் கேட்கவும் இல்லை. மாணவர்களுக்கு வழங்கப்படும் எப்-1 விசா சட்டவிரோதமாக, அப்பட்டமாக அதிபர் ட்ரம்ப் அரசு ரத்து செய்துள்ளது.

இதையும் படிங்க: இந்திய மாணவரை அமெரிக்காவிலிருந்து அனுப்பத் தடை.. ட்ரம்ப் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!

நீதிமன்றம் இதில் தலையிட்டு மாணவர்கள் தங்கள் படிப்பை முழுமையாக முடிக்க உதவ வேண்டும், தடுப்புக் காவலில் வைக்கவோ அல்லது நாடு கடத்தவோ கூடாது. இந்த மாணவர்கள் யார் மீதும் எந்த குற்றவழக்கும் இதுவரை இல்லை. எந்த குற்றத்திலும் இவர்கள் ஈடுபடவில்லை, தண்டிக்கப்படவும் இல்லை. குடியேற்றச் சட்டத்தை இவர்கள் மீறவும் இல்லை. பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த போராட்டம் எதிலுமே இவர்கள் பங்கேற்கவில்லை.

உள்துறை செயலர் கிரிஸ்டி நியாம், ஐசிஇ இயக்குநர் டாட் லியான்ஸ், ஐசிஇ கள அலுவலர் ராபர்ட் லின்ச் ஆகியோர் தன்னிச்சையாக முடிவு செய்து தங்கள் விசாவை ரத்து செய்துள்ளனர். இந்த மாணவர்கள் கடந்த காலத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரியுடன் சில மோதல்களில் ஈடுபட்டிருக்கலாம் முரண்பாடுகளைச் சந்தித்திருக்கலாம்.  

அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இப்போது அதிகாரிகள் எடுக்கிறார்கள். அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற அதிகாரிகள் அடக்குமுறை வெளிநாட்டு மாணவர்களின் உயர் கல்வி மீது தாக்குதல் நடத்துகிறது. இதேபோன்ற வழக்குகள் மாநிலத்தில் பல்வேறு மாகாணங்களில் நியூ ஹெமிஸ்பயர், இந்தியானா, கலிபோர்னியாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஹமாஸுக்கு ஆதரவு தெரிவித்ததாக இந்திய மாணவர் கைது.. அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share