சொட்டு தண்ணிக்கு சிங்கி அடிக்கணும்; பாகிஸ்தானை முடக்கிப்போட்ட இந்தியா - இந்த ஒப்பந்ததிற்கு இவ்வளவு பவரா?
பாகிஸ்தானுக்கு எதிராக 5 முக்கிய அறிவிப்புகளை இந்தியா வெளியிட்டுள்ளது. இதில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதும் ஒன்று. இதுகுறித்த விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதல், இந்தியாவின் பாதுகாப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய அரசு தயாராகி வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தானுக்கு எதிராக 5 முக்கிய அறிவிப்புகளை இந்தியா வெளியிட்டுள்ளது. இதில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதும் ஒன்று. சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன? இதனால் பாகிஸ்தான் என்ன மாதிரியான சோதனை எதிர்கொள்ளவுள்ளது என பார்க்கலாம்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்பது 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி அன்று போடப்பட்டது.அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் அப்போதைய பாகிஸ்தான் பீல்ட் மார்ஷல் முகமது அயூப் கான் தலைமையில் இந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையும் படிங்க: #BREAKING: அவர்களை மண்ணில் புதைக்கும் நேரம் வந்துவிட்டது... பாகிஸ்தானுக்கு மோடி ஆவேச எச்சரிக்கை!
இந்தியா - பாகிஸ்தான் எல்லை தாண்டி பல நதிகள் ஓடுகிறது என்பதால், அவற்றின் நீரைப் பயன்படுத்துவது குறித்து இரு தரப்பினருக்கும் இடையேயான ஒத்துழைப்பு, தகவல் பரிமாற்றம் ஆகியவற்றுக்கான வழிமுறை இந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் வகுத்தது எனலாம். மொத்தம் 6 நதிகளை இரு நாடுகளும் பொதுவாக நிர்வகிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.
கிழக்கு நதிகள் மூன்று, மேற்கு நிதிகள் மூன்றாகும். அதில் கிழக்கு நதிகளான சட்லெஜ், பியாஸ், ரவி ஆகியவற்றின அனைத்தை நீரையும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இந்தியாவின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகியவற்றின் நீர் பெரும்பாலும் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவை ஆண்டுக்கு சுமார் 99 பில்லியன் கன மீட்டர் நீருடன் இணைக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியா இந்த நதிநீர் தொகையின் சுமார் 30% மட்டுமே பயன்படுத்தலாம், மீதமுள்ள 70% பாகிஸ்தானுக்கே அனுப்பப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தை நிறுத்துவதன் மூலம், சிந்து நதியின் நீர் பாகிஸ்தானுக்கு பாய்வதை இந்தியா நிறுத்தும். சிந்து நதி பாகிஸ்தானின் பல மாகாணங்கள் வழியாக அரபிக்கடல் வரை பாய்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய தாக்கம் பாகிஸ்தானின் விவசாயத்தில் இருக்கும். அங்குள்ள வயல்கள் காய்ந்து, பயிர் விளைச்சல் நின்றுவிடும். 210 மில்லியனுக்கும் அதிகமான பாகிஸ்தான் மக்களின் தண்ணீர் தேவைகளும் இந்த சிந்து நதி நீர் அமைப்பைச் சார்ந்துள்ளது. அதாவது, அது நிறுத்தப்படுவதால், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். இதனால் பாகிஸ்தானில் கடும் உள்நாட்டு போர் வெடிக்கக்கூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவும் பாகிஸ்தானும் இடையே 1965, 1971 மற்றும் 1999 ஆகிய மூன்று போர்கள் நடந்தாலும் கூட, இந்த ஒப்பந்தம் எந்த நேரத்திலும் நிறுத்தப்படவில்லை. ஆனால், தற்போது நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் தொடர்புடையவை என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனையடுத்து இந்தியா கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு, நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட 63 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக இந்தியா அதன் நடைமுறையை நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசு பதில் சொல்லியே ஆகணும்..! பொன்முடிக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் காட்டம்..!