×
 

ஜீவனாம்சத்திற்கு ஒகே சொன்ன சாஹல்… எவ்வளவு தெரியுமா?

இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலிடம் இருந்து தனஸ்ரீ வர்மா தரப்பில் கோரப்பட்ட ஜீவனாம்சம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் பிரபல பாடகியும், மாடலுமான தனஸ்ரீ வர்மாவை கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்தார். கொரோனா காலத்தில் தனஸ்ரீ வர்மாவிடம் யோகா கற்றுக் கொண்ட போது, இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இருவரும் பல இடங்களுக்கு சென்று புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.

முதலில் மருத்துவராக இருந்த தனஸ்ரீ வர்மா, சாஹலை திருமணம் செய்துக்கொண்ட பின் அவரின் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் அவர், மாடலிங் உள்ளிட்ட துறைகளிலும் களமிறங்கினார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. அதை உறுதிப் படுத்தும் வகையில், சமீபத்தில் இருவரும் பிரியப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: திருப்பதி செல்லும் ரயில்களில் புதிய எல்எச்பி பெட்டிகள் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

கடந்த ஆண்டு இறுதி முதலே சாஹல் - தனஸ்ரீ வர்மா இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது. அதற்கேற்ப ஜனவரி மாதம் இருவரும் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நிறுத்தினர். இதனை தொடர்ந்து இருவரும் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி மும்பையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி முறையிட்டனர். அப்போது 2022 ஆம் ஆண்டு முதலே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் அதனால் ஆறு மாத கட்டாயக் காத்திருப்பு காலத்தை நீக்கி விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் சாஹலிடம் இருந்து ரூ.60 கோடி ஜீவனாம்சம் கோரி இருப்பதாகவும் தகவல் வெளியாகியது. இதனால் ரசிகர்கள் தனஸ்ரீ வர்மாவை கடுமையாக விமர்சித்தனர். பின்னர் இது வதந்தி என்று விளக்கம் அளிக்கப்பட்டது.  ஆனால் தற்போது, சாஹலிடம் இருந்து தனஸ்ரீ வர்மா தரப்பில் கோரப்பட்ட ஜீவனாம்சம் தொடர்பாக தகவல் வெளி வந்துள்ளது. அதன்படி, தனஸ்ரீ வர்மாவுக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சமாக சாஹல் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

அதில் ரூ.2.37 கோடி ஏற்கனவே சாஹலை கொடுத்துவிட்டதாகவும், மீதமுள்ள ரூ.2.38 கோடி விவாகரத்துக்கு பின் அளிக்க ஒப்புக் கொண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இவர்களின் திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த நிலையில், சுமார் 3 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: அமலாக்கத்துறை மீது டாஸ்மாக் நிறுவனம் வழக்கு.. தொடர் விசாரணை நடத்த தடைகோரி மனு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share