×
 

ஓடும் பஸ்ஸில் பாலியல் தொல்லை.. சில்மிஷம் செய்த கண்டக்டர்.. ஐ.டி பெண்ணின் அதிர்ச்சி வைத்தியம்..!

கோவையில் இருந்து நெல்லை சென்ற அரசு பஸ்ஸில் ஐடி பெண் ஒருவருக்கு கண்டக்டர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

கோயம்புத்தூரில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு அரசு சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் தூத்துக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஏறி பயணித்துள்ளார். அந்த இளம்பெண் கோவையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.

தொடர் விடுமுறையை முன்னிட்டு ஊருக்கு புறப்பட்டு செல்ல திட்டமிட்டவர், இறுதி நேரத்தில் அந்த பேருந்தில் ஏறி உள்ளார். அந்த பஸ்சில் கண்டக்டராக மகாலிங்கம் (வயது 43) என்பவர் பணியில் இருந்தார். மகாலிங்கம் கோவையை சேர்ந்தவர். பஸ் புறப்பட்டதும் மகாலிங்கம் அனைவருக்கும் டிக்கெட் கொடுத்து முடித்து உள்ளார். அதன் பின் இளம்பெண் பக்கத்தில் காலியாக இருந்த சீட்டில் போய் கண்டக்டர் மகாலிங்கம் உட்கார்ந்து உள்ளார்.

ஐடியில் வேலை பாக்கறீங்களா? என நைசாக இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்தார் மகாலிங்கம். அப்படியே பஸ் போகும் வேகத்தை காட்டி இளம்பெண்ணை நெருங்கி அமர்ந்துள்ளார். பிறகு, அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இளம்பெண் முறைத்து பார்த்ததும் பயந்து போன கண்டக்டர் மகாலிங்கம் நழுவிச் சென்றார்.

எப்பா.. கத்தி அசிங்கப்படுத்தல.. தப்பிச்சிட்டோம் என நினைத்து, அதன்பிறகு, தன் வேலையை பொறுப்பாக பார்க்க துவங்கினார் கண்டக்டர் மகாலிங்கம். சத்தம் போட்டு, சண்டை போட்டு நடுவழியில் பிரச்னை செய்ய வேண்டாம்; ஊருக்கு போனதும் பாத்துக்கலாம் என முடிவு செய்த இளம்பெண், நடந்ததை  குடும்பத்தினருக்கு வாட்ஸ் அப் மெசேஜாக அனுப்பினார்.

இதையும் படிங்க: மதுபானம் கொடுத்து நிர்வாணம்.. பள்ளி மாணவனை சிதைக்க பார்த்த காமுகன் மீது பாய்ந்தது போக்சோ..!

இன்று அதிகாலை 4 மணிக்கு பஸ் நெல்லை புதிய பஸ் நிலையத்திற்குள் நுழைந்தது. பஸ்சை விட்டு எல்லா பயணிகளும் வரிசையாக ஒவ்வொருத்தராக இறங்கினர். இளம்பெண்ணும் இறங்கிச் சென்று விட்டார். அப்பாடா தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிடுச்சினு நினைத்தபடி இறங்கிய கண்டக்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஐடி பெண் ஊழியருடன் அவர் குடும்பத்தினர் நாலைந்து பேர் பஸ்சுக்கு அருகில் நின்றிருந்தனர். கூட போலீசாரும் நின்றிருந்தனர். செல்போனில் வீட்டுக்கு தகவல் சொல்லி விட்டாள். போலீசுக்கும் விவகாரம் போய் விட்டது என்று கண்டக்டருக்கு நன்றாகவே புரிந்து போனது. கண்டக்டரை இளம்பெண்ணின் குடும்பத்தினர் அடிக்க பாய்ந்தனர். தன்னிடம் மோசமாக நடந்த கண்டக்டரை இளம்பெண் திட்டி  தீர்த்தார்.

இளம்பெண்ணின் குடும்பத்தினரிடம் இருந்து கண்டக்டரை போலீசார் மீட்டு ஜீப்பில் ஏற்றினர். கண்டக்டர் மகாலிங்கத்தை மேலப்பாளையம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது விசாரணையில் உறுதியானது. போலீசார், கண்டக்டர் மகாலிங்கத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

தன்னிடம்  சில்மிஷத்தில் ஈடுபட்ட கண்டக்டரை அமைதியாக இருந்து போலீசில் சிக்க வைத்த இளம்பெண்ணின் சாமர்த்தியத்தை மற்ற பயணிகள் பாராட்டினர். அரசு பஸ்ஸில் பயணித்த இளம்பெண் ஒருவரிடம் கண்டக்டரே பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சிறுமிக்கு செல்போனில் டார்ச்சர்.. போட்டோவை மார்பிங் செய்து மிரட்டல்.. கம்பி எண்ணும் இளைஞர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share