‘விடுதலை புலிகளை முற்றாக அழித்ததே தி.மு.க-தான்..!’ வண்டி வண்டியாய் ஆதாராங்களை அடுக்கும் சீமான்..!
அது இவர்களின் எதிர்கால அரசியலுக்கு இடையூறாகவும், ஆபத்தாகவும் அமையும். போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்கள்
‘விடுதலைப்புலிகள் இயக்கத்தை முற்றிலும் அளித்ததை திராவிடக் கட்சிகள் தான்’’ என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் புதிய சர்ச்சையை தொடங்கி வைத்துள்ளார்.
பிரபல யூடியூப்பிற்கு அவர் கொடுத்துள்ள பேட்டியில் இதுகுறித்து விரிவாக பேசியுள்ள அவர், ‘‘விடுதலைப் புலிகளுக்கு உதவியவர் பெருமகன் எம்ஜிஆர். அவர் அடிப்படையில் ஒரு வீரன், ஒரு கதாநாயகன். கருணாநிதி ஒரு கதாசிரியர். ஆனால், எம்.ஜி.ஆர் நாடக நடிகர், சிலம்பு வீசிக் கொண்டிருந்தவர். எம்ஜிஆருக்கு இலங்கை வாழ் தமிழர் மீது ஒரு பாசம் இருந்தது. ஆகையால் அவர் விடுதலைப்புலிகளுக்கு உதவினார்.
திராவிடர் கழகத்தில் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் தோட்டத்தில் விடுதலைப்புலிகள் பயிற்சி எடுத்தார்கள். இதன்பிறகு மிகப்பெரிய பொருள் உதவியை கொடுத்து விடுதலைப்புலிகளுக்கு உதவியவர் ஐயா எம்ஜிஆர். சிறிய சிறிய திராவிடக் கட்சிகள் அண்ணன் பிரபாகரனுக்கு உதவி இருக்கின்றன. அவருக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. ஆனால் திமுக ஆட்சி காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு செய்தது என்ன? பிரபாகரனுக்கு செய்தது என்ன? துரோகம் இல்லை.
இதையும் படிங்க: அரசியலில் பெரியாரை 'உடைக்கும்' சீமான்... தலையில் வைத்து கொண்டாடும் துக்ளக் குருமூர்த்தி!
தமிழினத் தலைவனாக காட்டிக் கொண்ட கலைஞருக்கு இருந்த காழ்ப்புணர்ச்சி தான். எம்.ஜி.ஆருடன் நெருக்கம் காட்டும், அவர் உதவி செய்யும் விடுதலைப்புலிகளுக்கு நாம் உதவி செய்ய வேண்டுமா? என்கிற காழ்ப்புணர்ச்சி கலைஞருக்கு இருந்தது. எல்லாவற்றுக்கும் முன் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என நினைத்தது திமுகதான். நான் சொல்வதில் உங்களுக்கு ஐயம் இருந்தால் அன்றைக்கு இந்திய நாட்டின் வெளியுறவுச் செயலாளராக இருந்த சிவசங்கர் மேனன் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று குறிப்பில் எழுதி உள்ளார்.
அதில், ‘‘இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன் போன்றவரை காப்பாற்ற வேண்டும். இலங்கையில் ஒரு அரசியல் தீர்வுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியதாகவும், ஆனால் அன்றைய ஆட்சி அதிகாரத்தில் இருந்த இந்திய தலைமையும், குறிப்பாக தமிழக தலைவர்களும் அதை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். அவர்கள் இரு தரப்பினரும் விரைவில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று விருப்பத்தில் உள்ளனர் என தெரிவித்து இருக்கிறார். பிரபாகரனின் இருப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அது இவர்களின் எதிர்கால அரசியலுக்கு இடையூறாகவும், ஆபத்தாகவும் அமையும். போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்கள் என இந்திய அரசின் வெளியுறவு துறை செயலாளரே தனது புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.
இலங்கை இறுதி போரின் போது அன்றைக்கு தமிழகத்தில் இருந்த தலைமை யார்? தமிழகத்தில் கருணாநிதி தான் இருந்தார். இதெல்லாம் இல்லை, பொய் என்றால் ஒரு இனத்தின் விடுதலைக்காக செத்த ஒரு மாபெரும் மாவீரனுக்கு நீங்கள் ஏன் சிறிய அளவில் கூட வணக்கம் செலுத்தவில்லை? தமிழனின் வாக்கை வாங்கி, அதிகாரத்தில் உட்கார்ந்து, கொண்டு ஆண்டு, அடித்து கொழுத்து, வளத்தை சுரண்டி ஊழல் லஞ்சம் என ஊரை அடித்து, அதிகாரத் திமிரில் அடக்கி ஒடுக்கி எல்லாம் செய்து விட்டு அங்கே உரிமை மீட்க போராடும் ஒரு இனத்தை பழி சுமத்தி தூக்கி போட்டுவிட்டு... சரி விடுங்கள். அங்கே இறையாண்மைக்கு எதிராக போராடியவர்கள் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.
இங்கே தமிழ் தமிழ்நாட்டில் செத்தானே முத்துக்குமார். அவனுக்கு வீர வணக்கம் செலுத்துவதில்லை. இதுதான் திமுக விடுதலைப்புலிகள் மீது வைத்திருந்த பாசமா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: 2026இல் தீயசக்தி திமுக வேரோடு அழியும்.. பொங்கல் விழாவில் எடப்பாடி பழனிச்சாமி சாபம்!