×
 

ராணுவத்தின் பொய்யும்… புரட்டும்... அம்பலப்படுத்திய பாகிஸ்தான் முன்னாள் அதிகாரி..!

பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யும் ஊழல், அரசியல் சூழ்ச்சிகளால் சூழப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைத் தாக்கி 440 பயணிகளை பலுச் விடுதலைப் படை பிணைக் கைதிகளாகப் பிடித்தது. கிட்டத்தட்ட 36 மணி நேரம் நீடித்த ஒரு நடவடிக்கைக்குப் பிறகு பிணைக் கைதிகளை மீட்டதாக பாகிஸ்தான் இராணுவம் கூறியது. இருந்தபோதும் பாகிஸ்தான் இராணுவம் உலகம் முழுவதும் அவமானத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பாகிஸ்தான் ராணுவம், அரசு, ஐஎஸ்ஐ பற்றிய உண்மையை அம்பலப்படுத்தும் ஒரு சம்பவம் இது என்று ஓய்வுபெற்ற பாகிஸ்தான் ராணுவ அதிகாரி அடில் ராஜா கூறியுள்ளார். பாகிஸ்தான் ராணுவம் எந்த அளவுக்கு பலவீனமடைந்துள்ளது என்பதையும், முழு அமைப்பிலும் மாற்றம் எவ்வளவு தேவை என்பதையும் இது காட்டுகிறது என்று ராஜா கூறினார்.

இங்கிலாந்தில் வசிக்கும் சமூக ஊடகங்களில் பிரபலமான அடில் ராஜா, ''ஜாஃபர் எக்ஸ்பிரஸ் தாக்குதல் பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பு அமைப்பை அம்பலப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் இராணுவம் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது. ஆனால், பெரும்பாலான பணயக்கைதிகளை விடுவிக்கத் தவறிவிட்டது. இந்தத் தாக்குதல், ஜெனரல் அசிம் முனிர் தலைமையிலான பாகிஸ்தான் இராணுவத்தின் முக்கிய தோல்வியையும் காட்டுகிறது. ஐஎஸ்ஐ ஊழல், அரசியல் தலையீடு நிலைமையை மோசமாக்கியுள்ளன. ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதலின் தீவிரத்தை பாகிஸ்தான் இராணுவம் குறைத்து மதிப்பிட முயன்றது. ஆனால்  நேரில் கண்ட சாட்சிகளின் அறிக்கைகள் சேதம் மிகப்பெரியது என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.

இதையும் படிங்க: #BREAKING: தீவிரவாதிகளை வேட்டையாடியது பாகிஸ்தான்..! அனைத்து பயணிகளும் மீட்பு

பலூசிஸ்தான் நீண்ட காலமாக கொந்தளிப்பில் உள்ளது. அங்கு சுயாட்சி கோரும் பலூச் கிளர்ச்சியாளர்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. உளவுத்துறை தோல்விகள் அங்கு பொதுவானவை. ஆனால் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முழுமையான தோல்விக்கு ஒரு எடுத்துக்காட்டு. பயங்கரவாத எதிர்ப்புத் திறன்களை பறைசாற்றி வரும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு, பலூச் விடுதலைப்படை, ரயிலைக் கடத்தி, ராணுவ அதிகாரிகளைப் பிணைக் கைதிகளாகப் பிடித்தது பெரும் அவமானமாகும்.

அசிம் முனீர் இராணுவத் தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து, இராணுவம் அதிக முக்கியத் தவறுகளைச் செய்து வருகிறது. உள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்க பாகிஸ்தானால் இயலாது என்று தோன்றுகிறது. உடனடி தாக்குதலை சுட்டிக்காட்டும் நம்பகமான உளவுத்துறை அறிக்கைகளையும் இராணுவத் தலைமை புறக்கணித்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் உயிர் இழப்பும், சொத்து இழப்பும் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யும் ஊழல், அரசியல் சூழ்ச்சிகளால் சூழப்பட்டுள்ளது. உண்மையான அச்சுறுத்தல்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அந்த அமைப்பு எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைப்பதில் மும்முரமாக உள்ளது. பயங்கரவாதக் குழுக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

பலுசிஸ்தானில் நடந்த ரயில் தாக்குதல் பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கை. உளவுத்துறை, இராணுவ தோல்விகளின் பாதையில் நாடு தொடர்ந்து செல்ல முடியாது. இதை மேம்படுத்துவது மிகவும் முக்கியம். இருப்பினும், பாதுகாப்பு அமைப்பு மாற்றப்பட்டு, மக்கள் பொறுப்புக்கூறப்படாவிட்டால், இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பது கடினம். அத்தகைய சூழ்நிலையில், இராணுவம், அரசு, ஐ.எஸ்.ஐ ஆகியவை தங்கள் சொந்த நலன்களைத் தாண்டி நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கும்'' என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியாவில் ரயில் கடத்தல் நடந்துள்ளதா..? எங்கு நடந்தது தெரியுமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share