ஜம்மு காஷ்மீரின் கனவு திட்டம்.. ரயில் சேவையை ஏப்ரல் 19ல் துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!
பிற நகரங்களோடு ஜம்மு காஷ்மீரை இணைக்கும் ரயில் போக்குவரத்து சேவையை ஏப்ரல் 19ஆம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.
மலைப்பாங்கான அதில் ஜம்மு காஷ்மீர் அமைந்துள்ளதால் ரயில் போக்குவரத்தை அந்த இடத்தில் இயக்குவது மிகுந்த சவாலான ஒரு விஷயமாக இருக்கிறது. இருந்தாலும் அதனை சாத்தியப்படுத்தும் வகையில் ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் ஸ்ரீ நகர் பாரமுல்லா இடையே 272 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட ரயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த திட்டத்தின் படி கட்ரா - பானிஹால் இடையேயான 111 கி.மீ தொலைவிலான ரயில் இணைப்பின் பணி மட்டும் நிறைவுபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் திட்டம் வெற்றிகரமாக முடிவற்ற நிலையில் கடந்த ஜனவரியில் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. இதனை அடுத்து இந்த ரயில் சேவை திட்டத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 19ஆம் தேதி கட்ரா ரயில் நிலையத்தில் கூடிய செய்து துவக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்தால் தலைவர் பதவி ராஜினாமா.? ஒரு முடிவில் இருக்கும் அண்ணாமலை.!!
ஸ்ரீநகர் வழியாக காஷ்மீருக்குள் ரயிலில் பயணம் செய்ய இந்த திட்டம் வழிவகை செய்யும் என்றும் நாட்டின் பிற நகரங்களில் இருந்தும் ஜம்மு காஷ்மீருக்கு ரயிலில் இதன் மூலம் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கத்ரா பகுதியில் ரயில் நிலையம் திறக்கப்பட உள்ளதால் மாதா வைஷ்ணவி கோவிலுக்கு வருபவர்கள் அதிக அளவில் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த திறப்பு விழா, காஷ்மீருக்கு நேரடி ரயில் இணைப்புக்கான நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் என்றும் தற்போது, ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கின் சங்கல்டன் மற்றும் பாரமுல்லா இடையேயும், கட்ராவிலிருந்து நாடு முழுவதும் ரயில் சேவைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன., காஷ்மீரை இணைக்கும் லட்சிய ரயில் திட்டம் 1997 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது என கூறப்படுகிறது.
இருப்பினும், இப்பகுதியின் புவியியல், நிலப்பரப்பு மற்றும் வானிலை சவால்கள் காரணமாக இத்திட்டம் பல முறை ஒத்திவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் என்பது நவீன கால ‘பழமையான அழியாத ஆலமரம்’.. பிரதமர் மோடி புகழாரம்..!