Ex.அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான மனு தள்ளுபடி..! தமிழக அரசுக்கு செக் வைத்த சுப்ரீம் கோர்ட்..!
நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.
சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூவரும் செய்திருந்தனர். தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன் குமார் மீது பதியபட்ட வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.எ.ரவி கூட்டும் மாநாடு.. துணைவேந்தர்கள் பங்கேற்பார்களா.? முதல்வர் ஸ்டாலின் முடிவு என்ன?
இதன் பிறகு நில அபகரிப்பு தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. ஜெயக்குமாருக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: மாநாட்டுக்கு போகக் கூடாது.. துணைவேந்தர்களுக்கு உத்தரவு போடுங்க முதல்வரே.. ஒரே குரலில் திமுக கூட்டணி கட்சிகள்!