முதல்வர், அமைச்சர்களின் சம்பளம் 100% உயர்வு.. கர்நாடகாவில் நாளை மசோதா தாக்கல்..!
செலவினம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் சம்பளத்தை உயர்த்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி-க்கள், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் சம்பளத்தை 100 சதவீதம் உயர்த்த சித்தராமையா தலைமையிலான அரசு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பான சட்ட திருத்த மசோதா நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வை கர்நாடக மாநில உள்துறை மந்திரி ஜி. பரமேஷ்வரா நியாயப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்களின் செலவினம் அதிகரித்து கொண்டே சிறப்பாகவும் சாதாரண மனிதர்கள் சிரமப்பட்டு வருவதாகவும், எம்எல்ஏக்கள் மற்றும் மற்றவர்களிடமிருந்து பரிந்துரை வந்ததால் முதல்வரே இந்த முடிவை எடுத்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அதிர்ச்சி… ஹனிட்ராப்பில் சிக்கிய 48 அரசியல்வாதிகளின் வீடியோ சிடி... கர்நாடகாவில் பரபரப்பு..!
தற்போது முதல்வர் ரூ. 75 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். இனிமேல் 1.5 லட்சம் ரூபாய் பெறுவார் என்றும் அமைச்சர்களுக்கு 60 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கிறது சம்பளம் அதிகரிக்கிறது எனவே எம்.எல்.ஏ.-க்கள், எம்.எல்.சி.-க்கள் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள். இனிமேல் 80 ஆயிரம் ரூபாய் பெறுவார்கள் எனவும் கூறினார். பென்சன் 55 ஆயிரம் ரூபாயில் இருந்து 95 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட இருப்பதாக தெரிவித்த பரமேஸ்வரா, விமானம் அல்லது ரயில் டிக்கெட் அலவன்ஸ் 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 3.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கிறது., இதுபோக சொந்த தொகுதிகளில் பயணம் மேற்கொள்ள 60 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.
டெலிபோன் கட்டணம், தபால் கட்டணம் அலவன்ஸ் 85 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.10 லட்சமாகவும் சபாநாயகர் மற்றும் சட்ட மேலவைத் தலைவர் சம்பளம் 75 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாரம் 2 சரக்கு பாட்டில்கள் மக்களுக்கு இலவசமாகக் கொடுங்க முதல்வரே..! சட்டசபையில் கெஞ்சிய எம்.எல்.ஏ..!