×
 

கர்ப்பிணி பசுவுக்கு வளைகாப்பு..! விருந்து வைத்து கொண்டாடிய தொழிலதிபர்..!

கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் தான் வளர்த்து வரும் பசு மாட்டிற்கு வளைகாப்பு செய்து 500 பேருக்கு விருந்தளித்து சிறப்பாக கொண்டாடி உள்ளார்.

நம்மில் பலருக்கு செல்லப்பிராணிகள் வளர்க்கும் பழக்கம் உண்டு. அதிலும் ஒரு சிலர் வீட்டில் ஒரு நபராக பாவித்து பிறந்தநாள் கொண்டாடுவது, வளைகாப்பு செய்வது என குடும்ப நபர்களுக்கு செய்யும் அத்தனை கொண்டாட்டங்களையும் செல்ல பிராணிகளுக்கு செய்வார்கள். அப்படி கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தான் வளர்த்து வரும் பசுமாடு கர்ப்பமானதை அடுத்து அதற்கு வளைகாப்பு செய்து 500 பேருக்கு விருந்தளித்து அசத்தியுள்ளார். 

கர்நாடக மாநிலம், ஹாசனில் வசிக்கும் தொழிலதிபர் தினேஷ் தனது இல்லத்தில் பசுக்கள், காலைநிலை வளர்த்து வருகிறார். செல்லப்பிராணிகள் மீது மிகவும் அன்பு கொண்ட தினேஷ், இவர் வளர்ப்பு பிராணிகள் மீது, அதிக அன்பு கொண்டவர். தன் இல்லத்தில் பசுக்கள், காளைகள் வளர்க்கிறார். பெங்களூருவில் உள்ள பிடதி என்ற கிராமத்தில் இருந்து அல்லிகார் என்ற இனத்தைச் சேர்ந்த 4 மாத கன்று குட்டியை சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி வந்தார். இதற்கு கௌரி என பெயர் சூட்டி தினேஷ் வளர்த்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: டீசலுக்கான விற்பனை வரி லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு.. கர்நாடக அரசு அமல்..!

தற்போது கௌரி பசு கர்ப்பமாக உள்ள நிலையில் அதற்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்தார். அதற்காக சென்னராயபட்டணாவில் உள்ள திருமண மண்டபத்தில், பசுவுக்கு ஹிந்து சம்பிரதாயப்படி வளைகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பெண்களுக்கு நடப்பது போன்று அனைத்து சடங்குகளும் பசுவுக்கு நடத்தப்பட்டன. கௌரி பசுவை அலங்கரித்து பூ மாலைகள் அணிவித்து, வெற்றிலை, பச்சை நிற வளையல்கள், அட்சதை, தேங்காய், பழங்கள் வைத்து ஆரத்தி எடுத்தனர். பின்னர் பசுவுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், அனைவருக்கும் ஐந்து விதமான சாதம் உட்பட பிரம்மாண்ட விருந்து பரிமாறப்பட்டது.

இந்த வளைகாப்பு நிகழ்ச்சி தொடர்பாக பேசிய தொழிலதிபர் தினேஷ், அழிவின் விளிம்பில் உள்ள ஹல்லிகார் இன பசுக்களை பாதுகாப்பது நமது கடமை என்றும், இந்த வளைகாப்பு நடத்தியதன் மூலமாக விவசாயிகள், கால்நடை பிரியர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டதாகவும், வியாபார நோக்கத்திற்காக மட்டும் பசுக்களை வளர்க்க கூடாது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: 150 அடி தேர் சாய்ந்து விபத்து! பரிதாபமாக பறிப்போன உயிர்கள்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share