×
 

கர்நாடக மாஜி டிஜிபி ஓம் பிரகாஷ் மர்ம மரணம்.. பெங்களூருவில் பெரும் பரபரப்பு.!!

கர்நாடகா மாநில முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் பெங்களூரில் உள்ள அவருடைய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநில முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் பெங்களூரில் உள்ள அவருடைய வீட்டில்  சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். 1981ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ஜ் அதிகாரியான இவர், கர்நாடகா மாநில டிஜிபியாக 2015 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார். 2017இல்  பணி ஓய்வு பெற்றவர்.  பெங்களூர் தெற்கில் ஹெச்.எஸ்.ஆர். லே அவுட் பகுதியில் அவருடைய வீடு உள்ளது. இ ந்நிலையில் அவருடைய வீட்டிலிருந்து இன்று ஓம் பிரகாஷ் சடலமாக கிடந்தார். இதனையடுத்து ஓம் பிரகாஷ் உடலை போலீஸார் கைப்பற்றினர். அவருடைய உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓம் பிரகாஷ் சடலமாக மீட்கப்பட்ட அறையில் ரத்த கறைகள் ஆங்காங்கே இருந்தன. இதனையடுத்து சந்தேக மரணமாக பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ஓம் பிரகாஷின் மனைவி பல்லவிதான் இவருடைய மரணம் குறித்து போலீசாருக்கு  முதலில் தகவல் அளித்துள்ளார். ஆனால், போலீஸ் அதிகாரிகள் வந்தபோது கதவைத் திறக்க அவர் மறுத்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் உயரதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் டிஜிபியின் மர்ம மரணம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகா: பாலியல் குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை.! போலீஸ் அதிரடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share