27 வயது மெழுகு சிலை.! கலக்கும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின்
அமெரிக்க வெள்ளை மாளிகையின் புதிய செய்தி தொடர்பாளராக குடியரசு கட்சியை சேர்ந்த கரோலின் லிவிட்
அமெரிக்க ஜனாதிபதி மாளிகை வெள்ளை மாளிகையின் புதிய செய்தி தொடர்பாளராக குடியரசு கட்சியை சேர்ந்த கரோலின் லிவிட் என்னும் இளம் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வெறும் 27 வயதான கரோலின் தான் அமெரிக்க சரித்திரத்தில் மிக இளவயது செய்தி தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த கரோலின்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
பார்ப்பதற்கு சினிமா நட்சத்திரம் போல் தோற்றமளிக்கும் கரோலின் லீவிட் நியூ ஹம்ஸ்பையரின் மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர். அங்குள்ள அன்ஸிலும் கல்லூரியில் படிக்கும் போது அரசியலில் காலடி வைத்தவர். குடியரசு கட்சி மற்றும் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான கரோலின் லிவிட் தற்போது டொனால்ட் ட்ரம்பால் நேரடியாக செய்தி தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 23 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ராஜினாமா மின்னஞ்சல்… 8 மாத ஊதியத்துடன் வெளியேறலாம்… அமெரிக்காவை அலறவிடும் ட்ரம்ப்..!
தனது சொந்த மாநிலமான நியூ ஹம்ஸ்பயிர் இல்உள்ள கல்லூரியில் தகவல் தொடர்பு மற்றும் அரசியல் அறிவியல் பிரிவு எடுத்து படித்தவர்.அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் FOX நியூஸ் மற்றும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளராகவும் இவர் பயிற்சிபெற்றவராவார்.
கல்லூரி முடித்த காலத்தில் இருந்தே இவர் டொனால்ட் டிரம்பினுடைய செய்தி தொடர்பு மற்றும் உதவிகரமான வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். 2022 ஆம் ஆண்டு காரோலின் லிவிட் நியூ ஆம்ஸ்பெயரின் மாநிலத்தில் முதல் காங்கிரஸ் மாவட்டத்திற்கு போட்டியிட்டார் குடியரசு கட்சி வேட்பாளராக வெற்றியும் பெற்றார்.
ஆனால் அடுத்த நடைபெற்ற பொது தேர்தலில் கிரிஷ் பாப்சிடம் தோற்றுப் போனார். இப்படி மிக இளம் வயதிலேயே பல நிலைகளை கடந்து வந்த கரோலின் லிவிட் தற்போது டிரம்ப் நிர்வாகத்தில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளராக பதவி ஏற்றுள்ளார்.
பார்ப்பதற்கு வசீகரமாகவும் எளிமையான தோற்றத்தோடு உள்ள காரோலின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மிக நுணுக்கமாகவும் சாதுரியமாகவும் பதில் அளிப்பதில் வல்லவர் ஆவார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த காரோலின் 100 பேர் அமரக்கூடிய வெள்ளை மாளிகை பத்திரிகை அறையில் பத்திரிகையாளர் சந்திப்புகளில் கலந்து கொள்வதற்கு பத்தாயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை: வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயற்சி...