×
 

தெருநாய்கள் தொல்லை தாங்க முடியல... பிரதமர் மோடியிடம் புலம்பிய கார்த்தி சிதம்பரம்!!

இந்தியாவில் தெரு நாய்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரம், இன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அவர் பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகள் வைத்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடியுடனான தனது சந்திப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், இன்று நாடாளுமன்ற அலுவலகத்தில் பிரதமரைச் சந்தித்து, தெருநாய்களால் அதிகரித்து வரும் உடல்நலம் பாதிப்பு மற்றும் பாதுகாப்பு கவலைகளை அவரது கவனத்திற்குக் கொண்டு வந்தேன். உலகளவில் மிகப்பெரிய தெருநாய் மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு 6.2 கோடிக்கும் அதிகமான தெருநாய்கள் உள்ளன.  உலகில் பரவும் ரேபிஸ் தொடர்பான இறப்புகளில் 36% இந்தியாவில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: எனக்கு 8 மொழிகள் தெரியும், குழந்தைகளால் பலமொழிகளைக் கற்கமுடியும்.. மும்மொழி கொள்கைக்கு சுதா மூர்த்தி ஆதரவு..!

இந்தியா ரேபிஸ் நோய் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாகும். விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ABC) விதிகள், 2023 அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், செயல்படுத்தல் பயனற்றதாக உள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடியிடம் கவலை தெரிவித்தேன். தெருநாய் கடி சவாலை எதிர்கொள்ள ஒரு நீண்ட கால திட்டம் வகுக்க வேண்டும். உள்ளூர் அமைப்புகளுக்கு இந்த சிக்கலை திறம்பட கையாள போதுமான நிதி மற்றும் தொழில்நுட்பம் இல்லை.

அவசர நடவடிக்கை தேவை என்பதால் அவர்களுக்கு தீர்வை வழங்கும் விதமாக ஒரு குழுவை நிறுவ பரிந்துரைத்தேன். உள்ளாட்சி அமைப்புகளுடன் நெருக்கமாக பணியாற்றும் போது, ஒரு முழுமையான, மனிதாபிமான மற்றும் அறிவியல் பூர்வமான தீர்வை வழங்க ஒரு தேசிய பணிக்குழுவை அமைக்க நான் பரிந்துரைத்தேன். மேலும் கூடுதலாக, இந்த சவாலை எதிர்கொள்ள பிரத்யேக தங்குமிட வீடுகளும் நீண்டகால திட்டமும் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய் அரசியல் மேடைக்கும், மீம்ஸுக்கும் மட்டுமே… கிழித்தெடுத்த கார்த்தி சிதம்பரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share