கருணாநிதி என்னை தலைவராக்கினார்... ஸ்டாலின் என்னை முதல்வராக்குவார்.. காவல் நிலையம் வெளியே சீமான் பஞ்ச்..!
என்னை சிறையில் போட்டு கருணாநிதி என்னை தலைவராக்கினார். அவருடைய மகன் என்னை முதல்வராக்காமல் விடமாட்டார் என்று தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு ஆஜரானார். காவல் நிலையத்தில் சீமான் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பானது. இந்த விசாரணை 75 நிமிடங்கள் வரை நீடித்தது. விசாரணைக்ககுப் பிறகு சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''என் வீட்டில் சம்மன் ஒட்டிய பிறகு காவல்துறை வேலை முடிந்துவிட்டது. சம்மன் ஒட்டும்போது தடுத்தால்தான் பணி செய்யவிடாமல் தடுத்ததாக கைது செய்யலாம். ஒட்டப்பட்ட சம்மனை நாங்கள் பார்த்த பிறகு கிழித்தோம். அது எப்படி குற்றமாகும்?
எங்கள் வீட்டில் கைது செய்யப்பட்டவர் காவலாளி அல்ல. அவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். என் மீதான அன்பு காரணமாக, எனக்குப் பாதுகாப்பு அளிக்க பாசத்தின் காரணமாக வந்தவர். வீட்டில் கைதான இருவரையும் காவல்துறையினர் இரும்பு கம்பியில் துணியைச் சுற்றி அடித்துள்ளனர். நானும் என் மனைவியும் மனஉறுதி கொண்டவர்கள். என்னை நேசிக்கும் தம்பி, தங்கைகள் வலியுடன் குரல் செய்திகளை அனுப்புகிறார்கள். அது வலியை மட்டுமல்ல வெறியையும் ஏற்படுத்துகிறது.
கடந்த ஆண்டு மூன்று மணி நேரம் என்னிடம் விசாரணை நடந்தபோது கேட்கப்பட்ட அதே கேள்விகள் இந்த முறையும் கேட்கப்பட்டது. புதிதாக ஒன்றுமில்லை. காவல் நிலையத்துக்கு தாமதமாக வருவதற்கு போலீஸ்தான் காரணம். முதல்வர் உரையாற்றிக் கொண்டிருந்ததால் என்னை விசாரணைக்கு அழைக்க தாமதம் செய்தனர். பெரியார் கொள்கைகளுக்கு எதிராக பேசுவதால் என்னை கைது செய்ய திராவிடர் கழகத்திருந்து அழுத்தம் சென்றுள்ளது. நான் இந்த கைது, மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன். அது அவர்களுக்கே நன்றாக தெரியும். என்னை சிறையில் போட்டு கருணாநிதி என்னை தலைவராக்கினார். அவருடைய மகன் இப்போது இப்படிச் செய்து
என்னை முதல்வராக்காமல் ஓயமாட்டார்கள்.
என் மீது பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? விரும்பி பாலியல் உறவு வைத்துக் கொண்டவர் நடிகைதான். நடிகையுடன் ஏற்பட்ட உறவு, திருமணம் என்ற நிலைக்கு வரவில்லை. நடிகையுடன் 6 அல்லது 7 மாதங்கள்தான் பழக்கம் இருந்தது.
கஷ்டத்தில் இருந்த போது நடிகை எனக்கு எப்படி ரூ 60 லட்சம் தர முடியும்? அவர் என்னை காதலித்திருந்தால் இப்படி முச்சந்திக்கு வந்திருக்க மாட்டார். நடிகை வைத்திருந்தது காதல் அல்ல, கண்றாவி. 'விஜயகாந்த் போல எனக்கு சினிமா பின்புலம் இல்லை, ஆனாலும், மக்கள் என்னை அங்கீகரித்திருக்கிறார்கள். முதல்சர் ஸ்டாலின் அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று சீமான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING போலீஸ் போட்ட திடீர் உத்தரவு... சீமான் கார் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தம்... காரணம் என்ன?