காஷ் பட்டேலின் அழகிய காதலி..! யார் இந்த அலெக்சிஸ் வில்கின்ஸ்..!
காஷ்யப் பட்டேலோடு நின்றிருந்த அவரது காதலி அலெக்சிஸ் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அமெரிக்காவின் 9-வது எப்.பி.ஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இந்திய குஜராத்தி வம்சாவளி அமெரிக்கரான காஷ்யப் பட்டேல். மிகப்பெரிய சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் இடையே அடித்து பிடித்து வெற்றி பெற்று இந்த பதவியை பிடித்துள்ள கஷ்யப் பட்டேல். கடந்த வியாழக்கிழமை அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்பாக FBI இயக்குனராக அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டார்.
அப்போது பகவத் கீதையின் மீது சத்திய பிரமாணம் செய்து அவர் பதவியேற்றுக் கொண்டார்,அவரோடு அவரது காதலி அலெக்சிஸ் வில்கின்செஸ் மற்றும் காஷ்யபின் சகோதரி, சகோதரியின் மகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: 1000 FBI ஏஜென்ட்களை தண்ணி இல்லா காட்டுக்கு தூக்கி அடித்த காஷ் பட்டேல்..! பகவத் கீதை மீது சத்தியம் செய்து பிரமாணம்..!
காஷ்யப்போடு நின்றிருந்த அவரது காதலி அலெக்சிஸ் அன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார், பார்ப்பதற்கு ஒரு மாடல் அழகி போல் காட்சியளித்த அவர் முதலில் கஷயப்யின் மனைவி என அனைவரும் நினைத்தனர், பின்னர் தான் அவர் மனைவி அல்ல அவரது நீண்ட நாள் காதல் என்பது தெரிய வந்தது. அமெரிக்க அரசாங்கத்தின் ஒன்பதாவது ஃபெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் இன் இயக்குனராக பொறுப்பேற்றுள்ள காஷ்யப் பட்டேலின் காதலி பெயர் அலெக்சிஸ் வில்கின்ஸ் ஆகும்.
2022 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பழமை வாத அமைப்பு ஒன்று நடத்திய பேரணியில் முதன்முறையாக இருவரும் சந்தித்துள்ளனர், 2023 ஆண்டு தொடக்கத்தில் இருந்து இருவரும் அமெரிக்காவின் பல பகுதிகளில் டேட்டிங் செய்ய தொடங்கியுள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக காஷ் பட்டேல் தனது காதலியுடன் வசித்து வருகிறார். அமெரிக்காவில் பிரபலமான நாட்டுப்புற பாடல்களை பாடக்கூடிய பாடகி தான் இந்த அலெக்சிஸ் இவரது முதல் தனி பாடலான இபி மற்றும் வெட்ரன் டே பாடல்கள் ஒரு மில்லியனுக்கும் மேல் ஸ்ட்ரீம்களை சேகரித்து வெற்றிகரமாக OTT தளங்களில் ஓடியது கிறிஸ் எங். ஜான் நிக்கோலஸ்,சாரா எவன் மற்றும் பர்மிலி போன்ற பிரபலமான பாடகர்களுடன் அவர் சுற்றுப்பயணம் செய்து பல கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
அமெரிக்காவிற்கு குடிபெயர்வதற்கு முன்பாக சுவிட்ச்சர்லாந்து நாட்டிலும் அதற்கு முன்பாக இங்கிலாந்திலும் வளர்ந்தவர் தான் இந்த வில்கின்ஸ், இங்கிலாந்தில் உள்ள பெல்மாண்ட் யுனிவர்சிட்டியில் வணிகம் மற்றும் அரசியல் தொடர்பான பாடங்களை படித்து வந்தார். வெல்கின்ஸ் நாட்டுப்புற பாடல்கள் மட்டுமின்றி சமூக சேவைகள் செய்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவராம் அமெரிக்காவின் முன்னாள் படை வீரர்களின் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வில்கின்ஸ்,வாரியார் ரவுண்ட்ஸ் ஆப்ரேஷன், ஸ்டார்ட் டவுன் மற்றும் சோல்ஜர்ஸ் சைல்ட் போன்ற குழுக்களுடன் இணைந்து முன்னாள் படைவீரர்களுக்கு உதவி வருகிறார்.
காசியப் பட்டேல் ஒன்பதாவது FBI இயக்குனராக பதவி ஏற்றுள்ள நிலையில் சுமார் 10 ஆண்டுகள் இந்த பதவியில் நீடிக்க உள்ளார். இனி காஷ் பட்டேலின் பயணம் அலெக்ஸிஸ் வில்கின்சனுடன் தொடர்ந்து இருக்கும் என கூறப்படுகிறது நிச்சயம் கஷ்யப் பட்டேல்க்கு அலெக்ஸிஸ் வில்கின்சன் ஒரு ஊற்ற துணையாக பலமாக இருப்பார் என நம்புவோம்
இதையும் படிங்க: 1000 FBI ஏஜென்ட்களை தண்ணி இல்லா காட்டுக்கு தூக்கி அடித்த காஷ் பட்டேல்..! பகவத் கீதை மீது சத்தியம் செய்து பிரமாணம்..!