×
 

ஊழல்... ஊழல்... கெஜ்ரிவாலின் நிலைமைதான் நாளை திமுகவுக்கும்… நத்தம் விஸ்வநாதன் அதிரடி..!

தமிழகத்திலும் ஊழல் ஆட்சி புரிந்து வரும் திமுகவை விரைவில் வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராகி விட்டனர்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் நிலைமைதான் நாளை ஸ்டாலினின் திமுகவுக்கு வரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகம் இதுவரை களத்தில் இறங்கி வரவில்லை, கருத்து கூற ஒன்றுமில்லை. விஜய் இன்னும் அவருடைய செல்வாக்கை நிரூபிக்கவில்லை. செல்வாக்கை நிரூபிக்காமல் எதுவும் சொல்ல முடியாது. அவரைப் பற்றி கருத்து சொல்வதற்கு செய்திகள் இல்லை. தேர்தலை சந்தித்து இருந்தால் கருத்து கூறலாம்.

விஜய் வெற்றி பெறலாம், வெற்றி பெறாமலும் போகலாம். அவரைப் பற்றி கருத்து சொல்வதற்கு அபிப்பிராயம் இல்லை. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமையலாம், அமையாமலும் போகலாம். கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்ய முடியும். தி.மு.க.வும், ஊழலும் கூட பிறந்தது. தி.மு.க. என்றாலே ஊழல் தி.மு.க. அரசிற்கு எதிராகத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். தமிழகத்தில் கட்டுக்கோப்பான கட்சி ஒன்று இருக்கிறது என்றால் அது அதிமுக ஒன்று மட்டும் தான். இன்று நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஊழல் மிகுந்த ஆட்சி கெஜ்ரிவால் ஆட்சி தோல்வியை சந்தித்துள்ளது. எவ்வளவு நல்ல பணிகளை செய்திருந்தோம் என்று கூறினாலும் ஊழல் மிகுந்த ஆட்சி, அராஜகம் மிகுந்த ஆட்சியை கொடுத்ததால் டெல்லி மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்து உள்ளனர்.

இதையும் படிங்க: பாஜவுக்கு வாழ்த்துகள்.. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.. அரவிந்த் கேஜ்ரிவால் உருக்கம்

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் ஆட்சி புரிந்தார், ஊழல் ஆட்சி செய்ததே அவரது வீழ்ச்சிக்கு காரணம், அதே போல் தான் தமிழகத்திலும் ஊழல் ஆட்சி புரிந்து வரும் திமுகவை விரைவில் வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராகி விட்டனர். இதே நிலைதான் தமிழகத்திலும் ஊழல் நிறைந்த ஆட்சி, திமுகவினரின் அராஜகம் மிகுந்த ஆட்சி, மது கலாச்சாரம் என மக்களை பல்வேறு இன்னல்களுக்கு திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று தேர்தல் வந்தாலும் திமுகவிற்கு தக்க பாடம் தமிழக மக்கள் புகட்டுவார்கள். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. விரைவில் திமுக அரசை தமிழக மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழாவை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக அனைவரும் நடத்திட வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுபானத்தில்தான் கவனம்: அரவிந்த் கேஜ்ரிவாலை விளாசிய அன்னா ஹசாரே 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share