அழுதுகொண்டே வீட்டிற்கு போன கும்பமேளா மோனாலிசா... குடும்பத்தினர் என்ன செய்தார்கள் தெரியுமா?
தனக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டதை அடுத்து கும்பமேளா மோனலிசா அழுதுகொண்டே வீடு திரும்பியுள்ளார்.
உத்தரப்பிரேதசத்தில் 45 நாட்கள் கும்பமேளா விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து சென்றனர். இதனிடையே அந்த கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்பனை செய்து வந்த பெண் மோனலிசா. 17 வயதான இந்த பெண்ணின் முகம் பலரது கவனத்தை ஈர்த்தது. பலர் அவரது புகைப்படங்களை இணையத்தில் பரப்பினர். இதன் மூலம் அவர் ஒரே நாளில் பேமஸ் ஆனார். இதை அடுத்து அவர் மீடியாக்கள் கண்ணிலும் பட்டார்.
இதன் மூலம் அவர் மிக பிரபலமடைந்தார். மேலும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இதை அடுத்து அவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் அவரது வீடியோக்கள் பதிவேற்றினார். இதனிடையே டைரி ஆப் மணிப்பூர் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பை அவருக்கு தருவதாக கூறி இயக்குனர் சனோஜ் மிஸ்ரா முன்பணமாக ரூ.25 லட்சத்தை மோனலிசாவிடம் வழங்கினார். இந்த நிலையில், மோனலிசாவிற்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சனோஜ் மிஸ்ரா பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நூலிழையில் தப்பித்தார் கும்பமேளா மோனலிசா... இயக்குநர் கைது... எந்த வழக்கில் தெரியுமா?
இளம்பெண் ஒருவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி அப்பெண்ணை ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் படி சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க தடை விதித்துள்ளது. சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டதை அடுத்து ஏமாற்றத்துடன் கும்பமேளா மோனாலிசா அழுதுகொண்டே வீடு திரும்பியுள்ளார்.
அவரை அவரது குடும்பத்தினர் சமாதானப்படுத்தினர். இருந்த போதிலும் மோனாலிசா தொடர்ந்து அழுது கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் தான் ஏமாற்றப்பட்ட பெண்ணையும் வாய்ப்பு அளிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து 3 முறை கர்பமாக்கி ஏமாற்றியுள்ளார். ஒருபுறம் சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டு வந்தாலும் மறுபுறம் மோனலிசா அவரிடம் இருந்து தப்பித்ததாக கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: கும்பமேளா நீர் குளியலுக்கு அருமையான தண்ணீர்..! மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி அறிக்கை