வருகிறது லைப் டைம் பாஸ், வருஷ பாஸ்.. இனி டோல்கேட்டில் காத்திருக்கத் தேவையில்லை
தேசிய நெடுஞ்சாலை டோல்கேட்டில் வருகிறது லைப் டைம் பாஸ், வருஷ பாஸ்
தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட்டில் காத்திருப்பதுதான் வாகன ஓட்டிகளுக்கு பெரிய தலைவலியாக இருக்கும். பாஸ்டேக் வைத்திருந்தாலும், அது ஸ்கேனிங் செய்து அந்த இடத்தைவிட்டு வெளியேறுவதற்குள் நொந்துவிடுவார்கள்.
இதைத் தவிர்க்கும் பொருட்டு வாகனஓட்டிகள் சிரமத்தைக் குறைக்கும் வகையில் ஆண்டு பாஸ், லைப்டைம் பாஸ் ஆகிய இரு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் டோல்கேட்டில் வாகன ஓட்டிகள் வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை, தடையில்லாமல் நாடுமுழுவதும் செல்லலாம், மாதந்தோரும் பாஸ்டேக்கிற்கு ரீசார்ஜ் செய்ய நினைவில் வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.
வர்த்தகரீதியான வாகனங்களான லாரி, டெம்போ, டிரக் போன்றவற்றை இயக்குவோர், சொந்தமாக கார் வைத்திருப்போர் இனிமேல் ஒருமுறை பணம் செலுத்தி ஆண்டுபாஸ் அல்லது லைஃப்டைம் பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.
ஆண்டு பாஸ் எடுக்க வேண்டுமென்றால் ரூ.3000 செலுத்தி எடுத்துக் கொள்ளலாம், லைஃப்டைம் பாஸ் தேவைப்படுவோர் ரூ.30ஆயிரம் செலுத்தி பாஸ் பெறலாம். இந்த லைஃப்டைம் பாஸ் 15 ஆண்டுகளில் காலாவதியாகிவிடும்.
இப்போதுள்ள சூழலில் ஒரு வாகன ஓட்டி மாதந்தோறும் பாஸ்டேக் ரீசார்ஜ் செய்ய குறைந்தபட்சம் ரூ.340 செலவு செய்கிறார்கள், இது 12 மாதங்களுக்கு கணக்கிட்டால் ரூ.4080 ஆகிறது. ஆனால் ஆண்டு பாஸில் ரீசார்ஜ் செய்துவிட்டால், நாடுமுழுவதும் எந்த மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் டோல்கேட்டிலும் தடையின்றி செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
இதன் வேலிடிட்டி காலம் ஓர் ஆண்டாகும். மாதந்தோறும் பாஸ்டேக் ரீசார்ஜ் செய்யத் தேவையில்லை, அடுத்த ஆண்டு பாஸ் முடியும் தருவாயில் ரீசார்ஜ் செய்தால் போதுமானது.
மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் அளித்த பேட்டியில் “ தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்காக ஆண்டு பாஸ், லைஃப்டைம் பாஸ் திட்டத்தை ஆலோசித்து வருகிறோம். விரைவில் அது குறித்து தெரிவிப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.
கடந்த 2023-24ம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட்டில் மூலம் கிடைத்த வருவாய் ரூ.55 ஆயிரம் கோடியாகும். இதில் தனியார் கார்கள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.8ஆயிரம் கோடி. ஒட்டுமொத்த பரிமாற்றத்தில் 53 சதவீதம் தனியார்கார்கள்தான் சென்றுள்ளன, ஆனால், டோல்வசூலில் தனியார் கார்களின் பங்கு வெறும் 21 சதவீதம்தான். டோல்கேட்டில் 60 சதவீதம் போக்குவரத்து நெரிசல், பயன்பாடு என்பது தனியார் கார்கள்தான்.அதிலும் காலை 6மணி முதல் இரவு 10மணிவரை தனியார் கார்கள் போக்குவரத்து அதிகமாக இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு வருவாய் இழப்பு ஏதுமில்லை என்றாலும் வருவாயை பெருக்க இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இதையும் படிங்க: கொள்ளையடித்த பணத்தில், நடிகைக்கு ரூ.3 கோடியில் பங்களா - மீன் பண்ணை; பெங்களூருவில் கைதான 'பலே திருடன்' பற்றி பரபரப்பு தகவல்கள்
இதையும் படிங்க: 'வீர வசனம் பேசும் திமுக அமைச்சர்களை அடக்கியே தீருவோம்..!' பயமுறுத்தும் அண்ணாமலை..!