2025-ம் ஆண்டில், இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முதல் இடத்தில் முகேஷ் அம்பானி; தமிழகத்தின் சிவ நாடாருக்கு 3-ம் இடம்
பிறந்துள்ள 2025 ஆவது புத்தாண்டில் இந்தியாவில் உச்சத்தில் இருக்கும் 10 பணக்காரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும் தமிழகத்தைச் சேர்ந்த சிவ நாடார் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
நமது நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல் வியப்பை அளிக்கும் வகையில் உள்ளது. ஆனால் யாரும் ஆச்சரியப்படாமல், வியக்கத்தக்க வகையில் முகேஷ் அம்பானி இந்த பட்டியலில் முன்னணியில் இருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து கௌதம் அதானி, சாவித்திரி ஜிண்டால் மற்றும் சிவ (ஷிவ்) நாடார் போன்ற குறிப்பிடத்தக்க தொழில் அதிபர்கள் உள்ளனர். அவர்கள் பற்றிய விவரம்:-
1.முகேஷ் அம்பானி. வயது 67. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர்.சமீபத்தில் வெளியான நிதி அறிக்கைகளின் படி இந்த நிறுவனம் 2024 இந்தியா ஆண்டில் 1,000,122 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இந்த நிறுவனம் பெட்ரோல்கெமிக்கல் எண்ணெய் மற்றும் எரிவாயு சில்லறை விற்பனை, தொலைத்தொடர்பு மற்றும் பல்வேறு துறைகளில் செயல்படுகிறது.
இதையும் படிங்க: இந்து பெண்கள் மீது குடும்பக் கட்டுப்பாடு திணிப்பு: சர்ச்சை கருத்தை வெளியிட்ட இந்து முன்னணி நிர்வாகி கைது!
அம்பானியின் மூன்று பிள்ளைகளான ஆகாஷ், ஆனந்த் மற்றும் இஷா ஆகியோர் குழுமத்தின் பல்வேறு பிரிவுகளை நிர்வகித்து வருகிறார்கள்.
2. கௌதம் அதானி. வயது 62. அதானி குடும்பத்தின் நிறுவனர் மற்றும் தலைவர். இந்த பன்னாட்டு குழுமம் இந்தியாவிற்குள் துறைமுக செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சியில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அதானி அறக்கட்டளைக்கு அவருடைய மனைவி பிரீத்தி அதானி தலைமை தாங்குகிறார். குறிப்பிடத்தக்க வகையில் இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலைய ஆபரேட்டராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தையும் கட்டுப்படுத்துகிறது இந்த நிறுவனம்.
3. சிவ நாடார். வயது 79. செல்வத்தின் ஆதாரம் ஹெச் சி எல் என்டர்பிரைஸ். இந்த நிறுவனத்தின் நிறுவனரான சிவ நாடார் இந்தியாவின் ஐடி துறைகளில் ஒரு முன்னோடி ஆவார். சிஸ்கோ மைக்ரோசாப்ட் மற்றும் போயிங் போன்ற மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது இந்த நிறுவனம்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை போற்றும் வகையில் இந்திய அரசாங்கம் 2008 ஆம் ஆண்டின் சிவ நாடாருக்கு இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் மிருதான பத்மபூஷன் விருதை வழங்கியது.
பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இல்லாவிட்டாலும் அவர்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு நன்கொடை வழங்குவதில் நம்பர் ஒன் செல்வந்தராக சிவ நாடார் மதிக்கப்பட்டு வருகிறார். 2023 ஆம் ஆண்டு பிற்பகுதியில் பல்வேறு காரணங்களுக்காக 2042 கோடி அவர் நன்கொடையாக வழங்கி இருக்கிறார். தென்பாண்டி தமிழகத்தின் திருச்செந்தூர் அருகேமூலைப் பொழி கிராமத்தைச் சேர்ந்த அவர் திருச்செந்தூர் முருகன் கோவிலை உலகப் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலமாக மாற்றி அமைப்பதற்கு கோடிக்கணக்கான ரூபாய்பணத்தை வாரி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
4. சாவித்திரி ஜிண்டால் (வயது 74) மற்றும் குடும்பத்தினர். இவர் தொழில் அதிபர் மட்டுமின்றிஅரசியல்வாதியும் ஆவார். ஓ பி ஜி என்ற குழுமத்தின் எமெரிட்டஸ் தலைவராக பணியாற்றி வருகிறார்.
இவரை அடுத்து திலீப் ஷங்வி, சைரஸ் பூனவல்லா, குமார் பிர்லா, குஷால் பால் சிங், ரவி ஜெய் பிரியா, ராதாகிஷன் தமானி ஆகியோர் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளனர்.
இதையும் படிங்க: துப்பட்டாவை கழட்டி வச்சிட்டு வாங்க; முதல்வர் பங்கேற்க நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு நிகழ்ந்த அவலம்!