கார் மீது லாரி மோதி விபத்து - ஒரு வயது குழந்தை பலி..!
செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு வயதான குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சேர்ந்த கார்த்திக் நந்தினி தம்பதியினர் அவர்களது குழந்தைகளுடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக சென்னை வந்து உள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் தம்பதியினர் அவர்களது குழந்தைகளுடன் காரில் மதுரை நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருதேவி அருகே கார் காரிய சிக்னலில் நிறுத்தியுள்ளார் கார்த்திக். இந்த நிலையில் அதிவேகமாக பகுதியில் சென்ற கனரக லாரி ஆனது எதிர்பாராத விதமாக காரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கார் ஓட்டுநர் சரவணன் மற்றும் அய்யனார் ஆகியோர் உடல் நசையை சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரை இந்த போலீசார் ஒரு வயது குழந்தை மற்றும் ஏழு வயது சிறுமி உள்ளிட்டோருடன் மூன்று பேரை படுகாயங்களுடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: போதைப்பொருட்களை ஒழிக்க திமுக என்ன செய்தது..? எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி..!
பரிசோதனையின் போது ஒரு வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், ஏழு வயது சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதிரை பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சித்திரை திருவிழாவுக்கு தயாராகும் மாமதுரை.. மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு தேதி குறிச்சாச்சு..!