×
 

LPG டேங்கர் லாரிகள் போராட்டம் வாபஸ்..! ரூல்ஸ் தளர்த்தப்பட்டதால் சமூக உடன்பாடு..!

கடந்த 5 நாட்களாக நடைப்பெற்று வந்த எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் உரிமையாளர்கள் சங்கத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்து 500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்களுக்கு சொந்தமாக சுமார் 6 ஆயிரம் டேங்கர் லாரிகள் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் நடப்பாண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான ஒப்பந்தம் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள சில அறிவிப்புகள் தங்களுக்கு ஏற்புடையதாக அல்ல என்று லாரி உரிமையாளர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். புதிய ஒப்பந்த விதிகளில் 2 அச்சு லாரிகளை பயன்படுத்த கூடாது, 3 அச்சு லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மாற்று ஓட்டுனர் இல்லாத பட்சத்தில் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆட்சேபத்தை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்காத நிலையில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதையும் படிங்க: வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - ஒரே போடாய் போட்ட எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள்...!

தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக கோவையில் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் எல்.பி.ஜி. டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தென் மாநிலங்கள் முழுவதும் கடந்த 5 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றதால் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share