லூதியானா மேற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு! கார்கேவின் ஒப்புதல் யாருக்கு?
லூதியானா மேற்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு சட்டசபை தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வாக இருந்த குர்பிரீத் பாஷி கோகி சுமார் 22 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் பயணித்தவர். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது பஞ்சாப் சிறு தொழில்கள் மற்றும் ஏற்றுமதி கழகத்தின் தலைவராக பணியாற்றியவர்.
2014 முதல் 2019 வரை லூதியானா மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தார். அதன் பிறகு, 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அதே ஆண்டு லூதியானா மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது, அந்த தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த பாரத் பூஷன் ஆஷுவை தோற்கடித்தார்.
இதையும் படிங்க: இலங்கையிலும் தமிழ் பற்று... உளப்பூர்வமாக நெகிழ்ந்த பிரதமர் மோடி..!
இதனிடையே, தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் குர்பிரீத் பாஷி கோகி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். தினம்தோறும் தனது துப்பாக்கியை சுத்தம் செய்த வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். வழக்கம்போல், துப்பாக்கியை சுத்தம் செய்த போது எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது.
இதில் அவரது நெற்றியில் குண்டு பாய்ந்தது. அவர் இந்த சம்பவத்தில் அவர் உயிரிழந்த நிலையில், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் லூதியானா மேற்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சீவ் அரோரா போட்டியிடுவார் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சந்தீப் பதக் அறிவித்துள்ளார்.
இதனுடையே, பஞ்சாபின் லூதியானா மேற்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் பாரத் பூஷண் ஆஷூ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: கழுகாக நினைத்து காக்காவாகும் காங்கிரஸ்... பாஜக-வை வீழ்த்த மோடியின் பாதை... ராகுலின் புது ரூட்..!