தீயின் முன் தலைக்கீழாக தொங்கவிடப்பட்ட பச்சிளங்குழந்தை.. மூடநம்பிக்கையால் பறிபோன கண் பார்வை..!
ஆவி புகுந்ததாக கூறி, ஆறு மாத குழந்தை தீயின் முன் தலைக்கீழாக தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூடநம்பிக்கைக்கு இணையாக மட்டுமல்ல, அதற்குத் துணையாகப் பரப்பப்பட்டது பேய், பூதம், பிசாசு, ஆவி மூடநம்பிக்கைகள். நம் நாட்டில் மட்டுமல்ல, பல நாடுகளிலும் இந்த மூடநம்பிக்கை உண்டு. பகுத்தறிவுப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் நாம் கேள்விகளை எழுப்பி வருகிறோம். இதுவரை யாரும் பதில் சொன்னதில்லை. மாறாக அவர் சொன்னார் என்றோ, நான் பார்த்தேன் என்றோ சொல்லித் தப்பிவிடுவார்கள்.
வளர்ந்து வரும் நவீன உலகத்தில் மூடநம்பிக்கைகளும் உலவிக்கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடம்பில் ஆவி புகுந்ததாக கூறி ஆறு மாத குழந்தையை தலைகீழாக நெருப்பின் கீழ் கட்டி தொங்கவிடப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
இதையும் படிங்க: ஆண் நண்பருடன் மனைவியின் ஆபாச சாட்டிங்.. எந்த கணவராலும் பொறுத்துக் கொள்ள முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி..!
மத்தியபிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் கொலரஸ் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் உடல் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது.
ஆனால், குழந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லாமல் அதே கிராமத்தை சேர்ந்த ராகவீர் என்ற மாந்திரீகரிடம் காண்பிப்பதற்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது குழந்தையின் உடலில் ஆவி புகுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய தம்பதி, குழந்தையின் உடலில் புகுந்துள்ள ஆவியை வெளியேற்றுமாறு ராகவீர் தடக் இடம் வேண்டியுள்ளனர்.
இதையடுத்து, அவர் செங்கல்களை அடுக்கிவைத்து அதில் விறகுகள் கொண்டு தீ மூட்டியுள்ளார்.பின்னர், குழந்தையின் உடலில் புகுந்துள்ள ஆவியை விரட்டுவதாக கூறி பெற்றோர் கண் எதிரே அந்த தீயின் முன் பச்சிளம் குழந்தையை கட்டி தலைகீழாக தொங்கவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பச்சிளம் குழந்தை தீயின் வெப்பத்தால் அலறி துடித்துள்ளது.இந்த சம்பவத்தில் பச்சிளம் குழந்தையின் கண் பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
இதைக்கண்டு பதறிய பெற்றோர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குழந்தையின் கண் பகுதியில் கடுமையாக பாதிப்பு இருந்ததை கண்ட மருத்துவர்கள் இது குறித்து பெற்றோரிடம் விசாரித்தனர். அப்போது, மூடநம்பிக்கையில் குழந்தையை தீயின்முன் கட்டி தொங்கவிட்டதை பெற்றோர் கூறியுள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தை பார்வையை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன
நவீன காலத்திலும் மூடநம்பிக்கையின் உச்சத்தால் தீயின் முன் 6 மாத குழந்தை தலைகீழாக தொங்கவிடப்பட்டதில் கண்பார்வை பாதிப்படைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மனைவி, மகள்கள் சேர்ந்து தந்தை மீது தாக்குதல்.. சில நாட்களில் தந்தையின் மர்மச் சாவு ஏற்படுத்திய பரபரப்பு..!