×
 

சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம்..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

நெருங்கிய உறவுகள் இறுதிச்சடங்கில் கைதிகள் பங்கேற்க அனுமதி வழங்கும் அதிகாரத்தை சிறைத்துறை அதிகாரிகளுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெருங்கிய உறவுகள் இறுதிச்சடங்கில் கைதிகள் பங்கேற்க அனுமதி வழங்கும் அதிகாரத்தை சிறைத்துறை அதிகாரிகளுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க புழல் சிறையில் உள்ள தனது சகோதரனை விடுப்பு கொடுத்து அனுப்பி வைக்குமாறு அவரது சகோதரி மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விடுப்பு வழங்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரமுள்ள நிலையில், விசாரணை கைதிகள் நீதிமன்றங்களை நாட வேண்டியுள்ளதாக தெரிவித்தனர்.

எனவே நெருங்கிய உறவுகளின் இறுதிச்சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: தர்பூசணி பழங்களில் ரசாயனம் கலப்பா.? கலங்கி நிற்கும் விவசாயிகள்.. அரசுக்கு அன்புமணியின் கோரிக்கை!!

இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழல்.. தமிழக அரசுக்கு ஃபைன் போட்டு மனுவை டிஸ்மிஸ் பண்ணுங்க.. நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share