ஐ.நாவை விட்டு தூக்கணும்.. பாகிஸ்தானுக்கு எதிராக மதுரை ஆதீனம் ஆவேசம்...!
பஹல்காம் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றும் ஐநா சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும் என மதுரை ஆதீனம் வீடியோ வெளியிட்டுள்ளார்.
மதுரை தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள ஆதீனம் மடத்திலிருந்து மதுரை ஆதீனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. உலக நாடுகள் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். ஐநா சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
உலக நாடுகளில் பாகிஸ்தான் விளையாடுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், இந்தியாவும் பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டிலும் விளையாட கூடாது எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஏவுகணைச் சோதனை? - இந்தியாவின் கோபத்தை சீண்டும் பாகிஸ்தான்...!
இந்துவா சொல்லிச் சொல்லி கொலை செய்திருக்கிறார்கள் தீவிரவாதத்தில் அமைத்து பாகிஸ்தான் தான். எல்லைக்கதவு மூடப்பட்டுள்ளது, பிரதமர் சரியான முடிவை எடுத்துள்ளார்.60 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.
இதற்கு மூல காரணம் சீனா தான் ஆயுதங்களை கொடுக்கிறார்கள். சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக தான் செயல்படுகிறது இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: அமெரிக்க பயணத்தை பாதியிலேயே முடித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி..!