SCHOOL BAG-ல் கத்தி, காண்டம்.. எப்படியாச்சு பிள்ளைகள காப்பாத்துங்க.. கதறும் பெற்றோர்..!
மகாராஷ்டிராவில் பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் கத்தி காண்டம் சீட்டு கட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பொருள் மாதிரியான தீய பழக்கங்கள் மாணவர்களிடையே பரவி வருவது கவலை அளிக்கிறது. மேலும், தவறான நட்பு வட்டங்களும் மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது. இதனால் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி படிப்பில் கவனம் செலுத்தாமல் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி அடிதடி போன்ற சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு எதிர்கால வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.
போதை வஸ்துக்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் கத்திகள், இரும்பு சங்கிலிகள், காண்டம் பாக்கெட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட சமூகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: அடுத்த பாஜக தேசிய தலைவர் யார்..? நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை..!
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் கோட்டி என்ற பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில், படிக்கும் மாணவர்களின் பைகளில் திடீரென சோதனை நடத்தப்பட்டது. அப்போது கத்திகள், இரும்பு சைக்கிள் சங்கிலிகள், காண்டம் பாக்கெட்டுகள், சீட்டுக்கட்டுகள் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மாணவர்களில் சிலர் போதைப்பொருள்களுக்கு அடிமையாகி இருக்கலாம் என்றும்,பள்ளி உள்ளேயே போதைப் பொருட்களை பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நாட்கள் நடத்திய சோதனையில் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது என்றும் கூறினார். மேலும், கண்டிப்பான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு முறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: அவுரங்கசீப் கல்லறை விவகாரம்.. பதற்றத்தை தணிக்க சம்பாஜி நகரில் 144 தடை உத்தரவு..!