உண்மை, இரக்கம், அகிம்சை வளர்த்தவர் மகாவீர்! முதல்வர் ஸ்டாலின் மகாவீர் ஜெயந்தி வாழ்த்து..!
மகாவீர் ஜெயந்தியினைக் கொண்டாடும் மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜெயந்தி விழா என்பது ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஒரு விழா. மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தின் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் மகாவீரரின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஒரு சிறப்பு விழா.
30 வயதில், மகாவீரர் தனது உலக உடைமைகள் அனைத்தையும் துறந்து, ஆன்மீக ஞானத்தைத் தேடி துறவியாக மாறினார். அகிம்சை, உண்மை, திருடாமை, கற்பு மற்றும் பற்று இல்லாமை போன்ற போதனைகளுக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். மேலும், எளிமையான, அமைதியான மற்றும் நல்லொழுக்கமுள்ள வாழ்க்கையை வாழ்வதன் முக்கியத்துவத்தையும் மகாவீரர் வலியுறுத்தினார். அவரது பிறந்த தினத்தை மகாவீர் ஜெயந்தியாக சமண மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரதமர் வரும்போது ஊட்டிக்கு செல்வதா.? மன்னிப்பு கேளுங்க.. முதல்வர் ஸ்டாலினை வசைபாடும் அண்ணாமலை!
அந்த வகையில் இன்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மகாவீர் ஜெயந்தி விழாவை கொண்டாடும் சமண சமய மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ஏழை, எளியோரின் வாழ்க்கை சூழ்நிலைகளை உணர்ந்து அவர்களின் மேம்பாட்டிற்காக சிந்தித்தவர் மகாவீரர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
உண்மை, அகிம்சை, உயிர்களிடத்து இரக்கம், கொல்லாமை முதலான உயரிய கொள்கைகளை உலகுக்கு போதித்தவர் மகாவீரர் என்றும் மகாவீரர் ஜெயந்திக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதன்முதலில் கலைஞர்தான் அரசு விடுமுறை வழங்கினார் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவில் நிலைபெற்றுள்ள பழம்பெரும் சமயங்களில் ஒன்று ஜைனம் எனப்படும் சமண சமயம்., சமண சமயத்தின் 24-வது மற்றும் இறுதித் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீர் பிறந்த நன்னாளில் அவருடைய கொள்கைகளைப் பின்பற்றித் தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் சமண சமய மக்கள் அனைவருக்கும் மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
அரச குடும்பத்தில் பிறந்த மகாவீர் செல்வச் செழிப்பை வெறுத்து, ஏழை-எளியோரின் வாழ்க்கை சூழ்நிலைகளை உணர்ந்தவர் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், மகாவீர் ஜெயந்தியினைக் கொண்டாடும் சமண சமய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெரியவர் கருணாநிதி ஆதரித்ததை மகன் ஸ்டாலின் எதிர்ப்பதா.? நிர்மலா சீதாராமன் அதிரடிக் கேள்வி..?