நாயின் விலை ரூ.50 கோடியா? அப்படி அதுகிட்ட என்னதான் இருக்கு..?
பெங்களூரை சேர்ந்த ஒருவர் சுமார் 50 கோடி ரூபாய் கொடுத்து விலையுயர்ந்த அரிய வகை நாய் ஒன்றை வாங்கியுள்ளார்.
செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் சிலர் அதிக ஆர்வம் கொண்டிருப்பர். அதிலும் குறிப்பாக நாய் வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்கள் அந்த நாய்க்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வார்கள். அந்த வகையில் பெங்களூரை சேர்ந்த ஒருவர் சுமார் 50 கோடி ரூபாய் கொடுத்து விலையுயர்ந்த அரிய வகை நாய் ஒன்றை வாங்கியுள்ளார். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு வகையான நாய் இனங்கள் உள்ளன. அதில் பல நாய் வகைகள் செல்வந்தர்கள் வளர்ப்பதற்கு ஏற்றவாறு உருவாக்கப்படுகின்றன.
சில வகைகள் வேட்டையாடுதல் போன்றவற்றிற்காகவும், சில வீட்டுக் காவலுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வரிசையில் உலகில் உள்ள நாயினங்களில் மிகவும் விலை உயர்ந்த நாய் இனமாக WolfDog எனப்படும் நாயினம் இருந்து வருகிறது. இந்த நாயினமானது ஓநாய் மற்றும் கக்காசியன் ஷெப்பர்ட் இனங்களின் கலப்பில் உருவானதாகும். அமெரிக்கன் கென்னல் கிளப்பின் அறிக்கையின்படி, இந்த நாயின் இனம், அதன் பாதுகாப்பு உள்ளுணர்வு மற்றும் புத்திசாலித்தனத்திற்கு மிகவும் பிரபலமானது, மேலும் இது எட்டு மாத வயதுடையது மற்றும் 5 கிலோவுக்கு மேல் எடை கொண்டது.
இதையும் படிங்க: ராஜகண்ணப்பணுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!
இதை பெங்களூரை சேர்ந்த சதீஷ் என்ற நபர் 50 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். இவர் இதுமட்டுமின்றி 150க்கும் மேற்பட்ட வெவ்வேறு இன நாய்களை வீட்டில் வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து அவர் பேசுகையில், இந்த நாய்க்குட்டியை வாங்குவதற்கு நான் 50 மில்லியன் ரூபாய் செலவிட்டேன், ஏனென்றால் எனக்கு நாய்கள் மீது பிரியம் அதிகம். தனித்துவமான நாய்களை சொந்தமாக வைத்து இந்தியாவிற்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இந்த நாய்கள் அரிதானவை என்பதால், நான் பணம் செலவிடுகிறேன்.
மக்களும் அவற்றைப் பார்க்க எப்போதும் ஆர்வமாக இருப்பதால், எனக்கு போதுமான பணம் கிடைக்கிறது. நாய்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு நடிகரை விட எனக்கும் என் நாய்க்கும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. நாங்கள் இருவரும் கூட்டத்தை ஈர்க்கிறோம். உற்சாகமான பல கூட்டங்களுக்குக் நாய்களை அழைத்துச் செல்கிறேன். அங்கு 30 நிமிடங்களுக்கு என் நாய்களை பார்வைக்கு கொண்டுவர 2,800 டாலர் முதல் ஐந்து மணி நேரத்திற்கு 11,700 டாலர் வரை எங்கும் சம்பாதிக்கிறேன்.
கேடபாம்ஸ் ஒகாமியை பார்க்க ஏதோ பெரிய ஆள் மாதிரி இருக்கும். ஆனால், அது வெறும் 8 மாத குட்டி. அதற்குள் பல கிலோ எடையில் கம்பீரமாக இருக்கிறது. நாய் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்பதற்காக கேடபாம்ஸ் ஒகாமிக்கு பச்சை கறியைத் தான் போடுகிறேன். தினசரி 3 கிலோ வரை கறியை மட்டும் கேடபாம்ஸ் ஒகாமி சாப்பிடுகிறது என்றார். இவர் கடந்தாண்டே இதேபோல் 28 கோடி கொடுத்து ஒரு அரிய சௌ சௌ நாயை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏழுமலையான் தரிசனத்திற்காக பிச்சை எடுக்கணுமா? இங்கே கோயில்களா இல்லை? தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கொந்தளிப்பு..