மருந்தாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம்- மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய அப்டேட்!
அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தாளுநர் பணியிடங்களுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்காக விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும், www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் மாதம் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறையில் தென்னிந்தியாவுக்கு இழப்பு.... முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு தெலங்கானாவிலிருந்து ஆதரவுக் குரல்.!
விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரம் தமிழ் மொழி தகுதி தேர்வும், 2 மணி நேரம் கணினி வழியில் மருந்தியல் தேர்வும் நடைபெறும் என்றும் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்சி, எஸ்சி-ஏ, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500- ம், மற்றவர்களுக்கு ரூ.1,000 என்றும் வயது வரம்பு, ஊதியம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் அறியலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வரமாட்டோம்.. நாங்க தனியா போராடிக்கிறோம்.. தனி வழியில் சீமான்.!