#மேஜிக்கல் HANDS..! எம்.எப். ஹுசைன் ஓவியம் 119 கோடிக்கு ஏலம்..!
இந்தியாவின் பிகாசோ என்று அழைக்கப்படும் ஓவியக் கலைஞர் எம்.எப். ஹுசைனின் கிராம யாத்திரை எனும் ஓவியம் 119 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
இந்தியாவின் பிகாசோ என்று அழைக்கப்படுபவர் புகழ்பெற்ற ஓவிய கலைஞர் எம்.எப்.ஹுசைன். இந்தியா முழுவதும் உரையாடல்கள் மற்றும் கலைகளை ஊக்குவிக்கும் நபர்களில் முக்கியமான ஒருவராக அறியப்படுகிறார்.
மக்பூல் ஃபிடா ஹுசைன் 1915 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி பந்தர்பூரில் உள்ள ஒரு சுலேமானி போரா குடும்பத்தில் பிறந்தவர். ஹுசைன் மும்பையில் உள்ள சர் ஜாம்செட்ஜி ஜீஜேபாய் கலைப் பள்ளியில் பயின்றார். ஆனால் அவரால் பள்ளிப் படிப்பை முடிக்க முடியவில்லை. எனவே தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில், ஹுசைன் மும்பையில் சினிமா சுவரொட்டிகளை வரைந்து வந்தார்.
இதையும் படிங்க: புளோரிடாவில் பற்றி எரியும் காட்டுத்தீ..! செய்வதறியாது தவிக்கும் மக்கள்..!
இளம் வயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்த ஹுசைன், நன்கு கவிதை எழுதும் ஆற்றலையும் பெற்றவர். ஆரம்ப காலத்தில் சுவரொட்டி வரைதல், பொம்மை செய்யும் தொழில் ஆகியவற்றை செய்து வந்த இவர், சூரத், பரோடா, அஹமதாபாத் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று அங்குள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களை ஓவியமாகத் தீட்டினார்.
தன் ஓவிய திறனால் கொடிகட்டி பறந்த ஹுசைனின் 1947-ஆம் ஆண்டு பம்பாய் ஆர்ட் சொசைட்டி கண்காட்சியில் வைக்கப்பட்ட சுன்ஹேரா சன்சார் ஓவியம் விருது பெற்றது. மதுரா சிற்பங்கள் மற்றும் ஓவியங்களால் அவரை ஈர்த்த நிலையில், பல்வேறு ஓவிய கண்காட்சிகளை நடத்தினார்.
தமது படைப்பாற்றலால் போற்றப்பட்ட ஹுசைன், சர்ச்சை பேச்சுகளிலும் அதிகமாக பேசப்பட்டவர். சில சர்ச்சைக்குரிய ஓவியங்களால் பொதுநல வழக்குகளையும் சந்தித்தவர். தனது இறுதிக்காலத்தை லண்டனில் கழித்தாலும், இவரை இந்தியாவின் பிகாசோ என்று அழைப்பார்கள். பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் உட்பட பல விருதுகளை பெற்று தனித்துவமான ஓவிய கலைஞராக ஹுசைன் இருந்தார்.
இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவர் இறந்தாலும் அவரது ஓவியங்கள் இன்றும் உயிர்ப்புடன் தான் இருந்து வருகிறது. ஹுசைனின் மறுபிறவி என்கிற ஓவியம் கடந்த ஆண்டு லண்டனில் சுமார் ரூ.25.7 கோடிக்கு விற்கப்பட்டது.இந்த நிலையில், இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் சுறுசுறுப்பை கொண்டாடும் ஹுசைனின் படைப்பாக கருதப்படும் கிராம யாத்திரை எனும் ஓவியம் 13.8 மில்லியன் டாலருக்கு, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.119 கோடிக்கு ஏலம் போனது.
இதையும் படிங்க: ஹமாஸுக்கு ஆதரவு தெரிவித்ததாக இந்திய மாணவர் கைது.. அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு..!